தடுமாறும் தங்கம் விலை.. இன்று குறையுமா? வாங்கி வைக்கலாமா?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், ஃபெடரல் வங்கிக் கூட்டம் என பலவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே உள்ளன.

இப்படியே தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விட்டதே, குறையவே குறையாதா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

 தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கிட்டதட்ட 50 லட்சத்தினை தொடும் நிலையில், பலி எண்ணிக்கை 80,000 கடந்துள்ளது. இதுவே வல்லரசு நாடான அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3.70 டாலர்கள் அதிகரித்து, 1970 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை தான் இப்படி எனில், வெள்ளியின் விலையானது, அவுன்ஸூக்கு 0.024 டாலர்கள் அதிகரித்து, 27.483 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தங்கத்திற்கு இணையாக அதிகரித்து வரும் வெள்ளியின் விலையானது, அதன் தேவை அதிகரிப்பினை பிரதிபலிக்கிறது. தொழில்துறை வளர்ச்சியானது சற்றே மேம்பட தொடங்கியுள்ள நிலையில், வெள்ளியின் தேவையும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்தியாவினை பொறுத்த வரையில் எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 163 ரூபாய் அதிகரித்து, 51,932 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது டாலரின் மதிப்பானது மீண்டும் சற்று அழுத்தத்தில் உள்ள நிலையில், தங்கம் விலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

 இந்திய சந்தையில் வெள்ளியின் விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது இந்திய கமடிட்டி வர்த்தகத்திலும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 221 ரூபாய் அதிகரித்து, 69,168 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. செவ்வாய்கிழமையன்று சந்தையில் காலை நேர வர்த்தகத்தில் வெள்ளியின் விலையானது சற்று ஏற்றம் கண்டிருந்த நிலையில், முடிவில் சரிவில் முடிவடைந்து இருந்தது. இதற்கிடையில் இன்றும் என்னவாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

இன்றுடன் முடிவடைய இருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அதோடு வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு குறைவாகவே வைத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனாவினால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

எதிர்ப்பார்ப்பு என்ன?

எதிர்ப்பார்ப்பு என்ன?

கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது அதிகரிக்கும் பட்சத்தில் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக, 51,900 - 52,000 ரூபாயாக இருக்கும். சப்போர்ட் லெவல் 51,550 - 51300 ரூபாய் எனவும் கணித்துள்ளனர்.

வெள்ளியின் சப்போர்ட் லெவல் 68,500 - 68,000 ரூபாயாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 69,500 - 69,900 ரூபாயாகும். சரி இன்று வாங்கலாமா? தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் எப்போது வேண்டுமானாலும் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதே intraday வர்த்தகத்தினை பொறுத்தரையில், ஏற்ற இறக்கம் அதிகம் என்பதால், ஃபெடரல் வங்கி கூட்டத்திற்கு பின்பு முடிவு எடுக்கலாம்.

சர்வதேச சந்தையில் அடுத்த டார்கெட்.

சர்வதேச சந்தையில் அடுத்த டார்கெட்.

சர்வதேச சந்தையில் தற்போது தங்கம் விலையானது தற்போது 1970 டாலர்கள் என்ற நிலையில் வர்த்தகமாகி வரும் நிலையில், இதன் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 1978 - 1988 டாலர்களாகும். இதே சப்போர்ட் லெவல் 1955 - 1940 டாலர்களாகும்.

வெள்ளியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் 27.80 - 28.00 டாலர்களாகும். இதே சப்போர்ட் லெவல் 27.00 - 26.70 டாலர்களாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+