வாவ்.. இது சூப்பர் விஷயமாச்சே.. தங்கம் விலை இன்னும் குறையுமாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது வாரத்தின் முற்பாதியில் நல்ல ஏற்றத்தினையும், பிற்பாதியில் அதே சரிவினையும் கண்டது.

ஆக அதிக ஏற்றமும் இல்லாமல் சரிவும் இல்லாமல் தங்கம் விலையானது இருந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஏனெனில் தங்கம் விலையானது இப்படியே குறையுமா? அல்லது இங்கிருந்து ஏற்றம் காணுமா? தற்போது வாங்கி வைக்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆபரணத் தங்கம் விலை குறையுமா?

ஆபரணத் தங்கம் விலை குறையுமா?

எனினும் வரவிருக்கும் வாரங்களில் விழாக்கால தேவை அதிகரிக்கும் என்பதால், ஆபரணத் தங்கம் விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சரி வாருங்கள் பார்க்கலாம். சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் எப்படி இருந்தது? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எப்படி இருந்தது? இனி விலை குறையுமா? இந்த வாரம் வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? இப்படி தடுமாற்றத்தில் உள்ள நிலையில் வாங்கலாமா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தின் முற்பாதியில் ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த திங்கட்கிழமையன்று, அவுன்ஸூக்கு 1841.40 டாலர்களாக தொடங்கியிருந்தாலும், 1824.80 டாலர்கள் வரை குறைந்தது. எனினும் அங்கிருந்து ஏற்றம் காண ஆரம்பித்த தங்கம் 1879.80 டாலர்கள் வரை அதிகரித்தது. எனினும் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமையன்று 1826.80 டாலர்கள் வரை குறைந்து, பின்னர் 1843.70 டாலர்களாக முடிவடைந்தது.

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

இந்த வாரத்தில் எப்படி இருக்கலாம்?

வார கேண்டில் பேட்டனில் மார்னிங் ஸ்டார் பேட்டர் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆக நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கி வைக்கலாம். ஆனால் குறுகிய கால நோக்கில் திங்கட்கிழமையன்று எப்படி வர்த்தகமாக போகிறது என்பதனை பொறுத்து வாங்கலாமா? விற்பனை செய்யலாமா? என்பதனை முடிவு செய்யலாம் என காமாடிட்டி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் முற்பாதியில் ஏற்றத்திலும், பிற்பாதியில் சரிவிலும் காணப்பட்டது. வெள்ளியின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று 24.310 டாலர்களாக தொடங்கினாலும், அன்று குறைந்தபட்சமாக 23.630 டாலர்கள் வரை குறைந்தது. எனினும் அதிகபட்சமாக கடந்த வாரத்தில் 25.015 டாலர்கள் வரையிலும், குறைந்தபட்சம் 23.630 டாலர்கள் வரையிலும் சென்றது. வாரத்தின் முடிவில் 24.078 டாலர்களாகவும் முடிவடைந்துள்ளது. ஆக வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, சற்று ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஏற்றத்திலும், அதன் பிறகு இரண்டு நாட்கள் சரிவிலும், வார இறுதியில் சற்று ஏற்றத்திலும் முடிவடைந்துள்ளது. இதிலும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாக உள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். மீடியம் வர்த்தகர்கள் நாளைய தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாமா? வேண்டாமா என்பதனை முடிவெடுக்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது சற்று தடுமாற்றத்திலேயே கடந்த வாரத்தில் காணப்பட்டது. ஏனெனில் வாரத்தின் முதல் நாள் ஏற்றத்திலும், அடுத்த மூன்று நாட்கள் சரிவிலும், கடைசி வர்த்தக நாளான நேற்று சற்று ஏற்றத்திலும் சந்தை முடிவடைந்துள்ளது. இதிலும் நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கும் விதமாக உள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். எனினும் மீடியம் வர்த்தகர்கள் நாளைய தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாமா அல்லது வேண்டாமா? என்பதனை முடிவெடுக்கலாம்.

தங்கம் வாங்க சரியான நேரமா?

தங்கம் வாங்க சரியான நேரமா?

தற்போது பலரின் மனதிலும் எழுந்துள்ள ஒரே கேள்வி, தங்கத்தினை தற்போது வாங்கலாமா? ஏனெனில் பல காரணிகள் தங்கத்திற்கு எதிராக உள்ள நிலையில் தற்போது வாங்கலாமா? என்பது தான். ஆனால் நிபுணர்கள் இது தங்கம் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்கின்றனர். ஏனெனில் இது வரலாற்று உச்சத்தில் இருந்து 7000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு வரவிருக்கும் காலம் திருமண விழா பருவம், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக விலை அதிகரிக்கலாம். ஆக தங்கத்தினை இது வாங்க சரியான இடம் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம்

தங்கம் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம்

தங்கத்தின் விலை குறையத் தான் பல சாதகமான காரணிகள் உள்ளதே, அப்புறமும் ஏன் இப்படி குளறுபடிகள்? என்ன காரணம்? எதனால் குறைகிறது? பின் ஏற்றம் காண்கிறது. தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு அவ்வப்போது சற்று அழுத்தத்தினை கண்டு வரும் நிலையில் அதன் எதிரொலியானது தங்கம் விலையில் எதிரொலிக்கிறது.

தடுப்பூசிக்கு பலர் ஒப்புதல்

தடுப்பூசிக்கு பலர் ஒப்புதல்


கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், முதலில் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பின்னர் அமெரிக்காவும் பிப்சரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பிறகு தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து குறித்த சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் அது தங்கத்தின் விலை குறைய காரணமாக அமையலாம். எனினும் கடந்த வாரத்தில் நிபுணர்கள் கூறியதை போல தடுப்பு மருந்துகள் எப்போதிலிருந்து அமலுக்கு வருகின்றதே, அப்போதிலிருந்து தங்கம் விலை இன்னும் சரியத் தொடங்கலாம் என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத் தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவினை மீட்டெடுக்க ஊக்கத்தொகை அறிவிப்புகள் வந்துள்ளன. எனினும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், சரிவடைந்து வரும் பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க, இன்னும் ஊக்கத் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்திற்கான சாதகமாக பல காரணிகள் இருந்தாலும், தங்கம் விலையில் முக்கிய பங்கினை வகிக்கும் அமெரிக்க டாலரின் மதிப்பானது இன்றும் சற்று அழுத்தத்தில் இருப்பது கவனிக்கதக்க விஷயம்.

பல எதிர்பார்ப்புகள்

பல எதிர்பார்ப்புகள்

இது தவிர பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய பலத்த எதிர்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இப்படி சில விஷயங்கள் பற்றிய எதிர்ப்பார்ப்பும் தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதோடு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், இன்னும் பாதுகாப்பு புகலிடத்திற்கு ஊக்கமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது?

அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது?

அடுத்த வாரத்தில் அமெரிக்காவில் நடக்க விருக்கும் ஃபெடரல் வங்கிக் கூட்டம், அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள், பிரெக்ஸிட் ஒப்பந்தம், அமெரிக்க சீன பிரச்சனை இப்படி பல பிரச்சனைகள் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளன. இவைகள் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

உலக நாடுகளின் ஜிடிபி குறித்தான கணிப்பில் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரம் குறித்த முன்னேற்றமான கணிப்புகள், மூன்றாவது காலாண்டில் ஜிடிபி, இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதனால் குறுகிய கால நோக்கில் தங்கம் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டு வரும் பங்கு சந்தைகள்

மீண்டு வரும் பங்கு சந்தைகள்

சர்வதேச அளவில் மீண்டு வரும் பங்கு சந்தைகள், வரும் வாரத்தில் தங்கம் விலை குறைய சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் குறைந்து, பங்கு சந்தைகளில் முதலீட்டினை அதிகரிக்க வழிவகுக்கலாம். ஆக வரும் வாரத்தில் தங்கம் விலை குறையலாம்.

தங்கம் விலை எதிர்பார்ப்பு என்ன?

தங்கம் விலை எதிர்பார்ப்பு என்ன?

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் அடுத்த முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,150, முக்கிய சப்போர்ட் லெவல் 47,700 ரூபாயாகும். தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக நீண்டகால நோக்கில் வைத்திருக்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices struggling in last week, but outlook bearish

Gold price update.. Gold prices struggling in last week, but outlook bearish
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X