தடுமாறும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..!

சர்வதேச அளவில் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்தது. இந்த நிலையில் தங்கத்தினை விலை அதிகரிப்பால் இனி சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது வழக்கம் போல் சாத்தியமாகுமா?

ஓரு காலத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலையானது, ஓரு கிராம் தங்கத்தின் விலைக்கு சமமானது. ஆனால் இதிலும் நாம் லாபம் பார்க்க முடியும் என்றால், அது கமாடிட்டி வர்த்தகத்தில் தான்.

அதனால் தான் உலகம் முழுக்க இன்றளவிலும் தங்கம் பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. சரி ஏன் இப்படி தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. என்ன காரணம்? இன்றைய விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

நான்கு நாள் சரிவு

நான்கு நாள் சரிவு

முந்தைய சந்தைதினத்தின் தங்கம் விலையானது சற்று குறைந்து முடிவடைந்த நிலையில், சர்வதேச தங்கம் விலையும் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. ஆகஸ்ட் மாத பியூச்சர் கான்ட்டிராக்டில் 0.03% வீழ்ச்சி கண்டு 48,210 ரூபாயாக முடிவடைந்து இருந்தது. இது ஐந்து நாட்களில் நான்காவது சரிவாகும்.

கொரோனா எண்ணிக்கை பாதிப்பு

கொரோனா எண்ணிக்கை பாதிப்பு

எனினும் கொரோனா வைரஸ் அதிகரிப்பானது விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையில் பிரதிபலிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மொத்தம் 1,17,32,996 பேருக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதே இறப்பு எண்ணிக்கை 5,40,137 பேராக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவினை முந்திய இந்தியா

ரஷ்யாவினை முந்திய இந்தியா

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் கூற்றுப்படி, இந்த வாரம் ரஷ்யாவை இந்தியா முந்திவிட்டது. இன்னும் வரும் வாரங்களில் இந்தியாவில் இன்னும் கொரோனா வழக்குகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த மாதம் வெளியான அறிக்கையில் ஒன்றில் இந்தியாவில் ஜூலை மாதத்தில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. அதனை தற்போது ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தாக்கம் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

ஆக இது தங்கத்தின் விலைக்கு சாதகமான காரணியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச சந்தைகளிலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் உள்ளது. இதுவும் தங்கம் விலையை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்றோடு இரண்டாவது நாளாக தங்கம் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனினும் இன்று பெரியளவில் ஏற்றம் காணமல் தற்போது அவுன்ஸூக்கு 1.35 டாலர்கள் மட்டும் அதிகரித்து, 1,794.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.08% ஏற்றமாகும்.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது, தங்கம் விலையானது சற்று ஏற்றத்துடன் காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 0.11% வீழ்ச்சி கண்டுள்ளது. இது 0.020 டாலர் குறைந்து 18.562 டாலர்களாக வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 70 ரூபாய் அதிகரித்து, தற்போது 48,295 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.15% ஏற்றமாகும். நேற்றைய வர்த்தகத்தில் காலையில் சற்று வீழ்ச்சியுடன் தொடங்கினாலும், முடிவில் சற்று ஏற்றம் கண்டு 48,225 ரூபாயாக முடிவடைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை தொடக்கத்தில் 48,210 ரூபாயாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று சரிவுடன் காணப்படுகிறது. இது தற்போது 4 ரூபாய் குறைந்து, 49,786 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது தினமாக இன்று தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது இன்னும் மாற்றம் காணாத நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து காணப்பட்டது. இது கிராமுக்கு 4610 ரூபாயாகவும், இதே சவரன் விலையானது 112 ரூபாய் குறைந்து 36,880 ரூபாயாகவும் காணப்பட்டது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்து 6 நாட்களில் 4 நாட்கள் தங்கம் விலையானது தொடர்ந்து சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தகக்து.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்னும் மாற்றம் காணாத நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிராமுக்கு 49.60 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 49,600 ரூபாயாகவும் வர்த்தகமாகியும் வருகிறது. வெள்ளியின் விலையானது கடந்த ஆறு தினங்களில் மூன்று நாட்கள் ஏற்றம் கண்டு வந்தாலும், மூன்று நாட்கள் சரிவில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+