தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச தங்கம் விலையானது கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

 

இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இது இனி குறையுமா? இல்லை இப்படியே ஏற்றம் காணுமா? அடுத்து என்ன செய்யலாம்.

தற்போது சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் விலை நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வெள்ளியின் விலை நிலவரம் என்ன? சந்தையில் சாதக பாதகங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

comex தங்கம் விலை நிலவரம்

comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த ஆறு நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1847.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த அமர்வின்போது முடிவு விலையை விடவும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலை சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

comex வெள்ளி விலை நிலவரம்

comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போல, வெள்ளியின் விலையும் 2.21% ஏற்றத்தினை கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.573 டாலர் வீழ்ச்சி கண்டு, 26,490 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று பலத்த ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX தங்கம் விலை
 

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக 5 நாட்களாக சரிவினைக் கண்டு வந்தது தங்கம் விலை. இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 246 ரூபாய் அதிகரித்து, 48,870 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாக உள்ளது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது 2.05% ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 1509 ரூபாய் அதிகரித்து, 69,104 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் மேலாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இது வாங்க சரியான இடமா?

இது வாங்க சரியான இடமா?

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து சுமார் 7000 ரூபாய்க்கு மேல் குறைந்தவிலையில் தான் காணப்படுகிறது. அதோடு முதலீட்டாளர்கள் அமெரிக்கா ஊக்கத்தொகை பற்றிய அறிப்புவிப்புகளை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அதோடு இந்திய சந்தையில் வரும் வாரத்தில் தங்கத்தின் காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், கொஞ்சம் பொறுத்து மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices struggling today, silver also up in Rs.1500 above

Gold price updates.. Gold prices struggling today, silver also up in Rs.1500 above
Story first published: Friday, January 29, 2021, 14:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X