தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 1200 ரூபாய் உயர்வு..!

சென்னை: தங்கம் விலை வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை தடாலடியாக உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை (Today's Gold Rate) 150 ரூபாய் உயர்ந்து 13700 ரூபாயாக உள்ளது. இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 174 ரூபாய் உயர்ந்து 14959 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1200 ரூபாய் உயர்ந்து 1,09,600 ரூபாயாக உள்ளது.

சென்னை மற்றும் தமிழ்நாடு ரீடைல் சந்தையில் தங்கம் விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 1ஆம் தேதி துவங்கி இன்று வரையில் கிராமுக்கு 350 ரூபாய் உயர்ந்துள்ளது, ஜூன் மாதத்தில் சுமார் 9 சதவீதம் வரையில் குறைந்த தங்கம் விலைக்கு ஜூலை மாத துவக்கத்தில் நல்ல பூஸ்ட் கிடைத்துள்ளது.

தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 1200 ரூபாய் உயர்வு..!

சர்வதேச முதலீட்டு சந்தையில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் முன்பு கணித்தப்படி அதிரடியாக வட்டி விகிதத்தை உயர்த்தாமல் மெல்ல மெல்ல உயர்த்தும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதேவேளையில் முதலீட்டாளர்கள் ஏஐ மற்றும் செமிகண்டக்டர் துறையில் இருந்து மற்ற பிரிவுக்கு திருப்பியதும் முதலீட்டு சந்தையில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இதனால் தங்கம் விலை சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 1.33 சதவீதம் உயர்ந்து 4178 டாலராக உள்ளது, இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையிலும் ஆகஸ்ட் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் பியூச்சர்ஸ் விலை 1.44 சதவீதம் உயர்ந்து 1,47,850 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் கடந்த 5 வாரத்தில் முதல் முறையாக தங்கம் விலை 1 சதவீத உயர்வுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் கணிப்பை காட்டிலும் குறைவாக இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டு பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்துவதற்கான வாய்புகள் குறைந்துள்ளது. இதனால் ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது. இதன் மூலம் 2026ஆம் ஆண்டின் 2வது பாதி முதலீட்டு சந்தைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கோட்டாக் செக்யூரிட்டிஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 2027 மற்றும் அதன் பிற்பகுதியில் இருந்து தங்கம் விலை உயர துவங்கும் என அறிவித்துள்ளது.

முதலீட்டு சந்தையின் வரலாற்று தரவுகளை பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் தங்கம் பெரிய அளவில் சரிந்த பின்பு அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு Bull Run காலம் இருந்துள்ளதாகவும், இக்காலக்கட்டத்தில் தங்கம் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அப்படி பார்த்தால் தங்கம் விலை தற்போதை 4000-4500 டாலரில் இருந்து 9000 டாலர் வரையில் உயர வாய்ப்புள்ளது. இதேபோல் வெள்ளியும் ஒரு அவுன்ஸுக்கு 150 டாலர் வரையில் உயரும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த உயர்வை உருவாக்கப்போவது அமெரிக்க மத்திய வங்கயான பெட்ரல் ரிசர்வின் நாணய கொள்கையல் ஹாக்விஷ் டூ டோவிஷ் நிலை மாறும் போது தங்கம், வெள்ளி விலை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+