gold price Today: தங்கம் விலையானது இன்று நான்காவது நாளாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது சர்வதேச சந்தையில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், ஆபரண தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகின்றது.
தங்கம் விலையானது 1 மாதத்திற்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. இது வலுவான டாலர் மதிப்பு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தான தரவானது, வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம்.
தங்கம் விலையில் அழுத்தம்
அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவனானது முந்தைய மாதத்தினை காட்டிலும் 3% அதிகரித்துளது. இது மக்களின் வாங்கும் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த அளவுக்கு வந்துள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கியானது தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்கும் வரையில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கவே செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1844.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது 0.19% அதிகரித்து, 21.613 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 52 ரூபாய் குறைந்து, 56,074 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 26 ரூபாய் அதிகரித்து, 65,443 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 5280 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 42,240 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து, 57,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்றே குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 20 பைசா குறைந்து, 71.80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 71,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் தடுமாற்றம்.. இப்போ முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

சம்பளம் vs செல்வம்: உங்கள் ரூ.70,000 மாத சம்பளம் ரூ.1 கோடி சொத்துக்கு சமம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications