தங்கம் விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய வரலாற்று உச்சத்தினை எட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தான் பழைய வரலாற்று உச்சத்தினை உடைத்து புதிய உச்சத்தினை எட்டியது.
இதற்கிடையில் இன்று இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 56,517 ரூபாயாக புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. இது கடந்த அமர்வில் 56,370 ரூபாயினை எட்டியிருந்தது.
இதே வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 70,000 ரூபாய் என்ற லெவலை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றது.
டாலரின் மதிப்பு
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது மெதுவான ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. இது மேற்கொண்டு வட்டி விகிதம் வரவிருக்கும் அமர்வுகளில் மெதுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது எனலாம். இதற்கிடையில் தான் ஏற்கனவே தங்கம் விலையானது உச்சம் காணத் தொடங்கியுள்ளது எனலாம்.
சில்லறை விற்பனை தரவு
இதற்கிடையில் வரவிருக்கும் புதன்கிழமையன்று வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது சந்தையில் தாக்கத்தினைக் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இது டாலரின் மதிப்பில் பிரதிபலிக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ரெசசன் Vs தங்கம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
முக்கிய லெவல்கள்
கடந்த வாரத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்த நிலையில், பத்திர சந்தையும் 3.5% சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் தங்கம் விலை உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 1895 - 1882 டாலரையும், முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1934 - 1944 டாலர்களையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 56,050 - 55,780 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 56,510 - 56,650 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.60 டாலர்கள் குறைந்து, 1918.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் இது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று தடுமாறினாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 24.500 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 64 ரூபாய் அதிகரித்து, 56,388 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 428 ரூபாய் அதிகரித்து, 69,855 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5317 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 42,536 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்க ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தூய தங்கம்
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 5800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து, 58,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, 75.80 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1800 ரூபாய் அதிகரித்து, 75,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications