தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 4 நாள் ஏற்றத்திற்கு பிறகு.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா!

கொரோனா லாக்டவுனாக இருந்தால் என்ன? எந்த சுப நிகழ்வுகள் நடக்காமல் போனால் என்ன? மக்கள் தங்கம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் விலை என்னவோ நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு கொண்டே தான் செல்கிறது.

உலகமே கொரோனாவினை தடுக்க போராடி வரும் நிலையில், பல நாடுகளில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரமும் சீர்குலைந்து வருகிறது.

ஒரு புறம் கொரோனா மறுபுறம் பொருளாதாரம், என சுற்றி சுற்றி மக்கள் அடி வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் பொருளாதாரத்தினை மேம்படுத்த பல நாடுகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன.

அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு

அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு

இதன் ஒரு பகுதியாக சில நாடுகளில் லாக்டவுனில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தினை தூக்கி நிறுத்த பல ஊக்குவிப்பு சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உலகளாவிய சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்படுகின்றன. இந்த நிலையில் இருண்டு வரும் பொருளாதாரத்திற்கு மத்தியில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை குறைந்து வருகிறது

தங்கம் விலை குறைந்து வருகிறது

இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது இன்று குறைந்து வருகிறது. எனினும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்த அச்சங்களும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1727.24 டாலராகவும், இது வெள்ளி விலை 0.4% குறைந்து 17.64 டாலராகவும் உள்ளது.

தங்கம் விலையை ஆதரிக்கலாம்

தங்கம் விலையை ஆதரிக்கலாம்

கொரோனாவால் ஏற்பட்ட மோசமான வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான பாதை மிக நீண்டதாக இருக்கும் என்று அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி எச்சரித்தது. மேலும் எதிர்காலத்தில் விகிதங்களை குறைவாக வைத்திருப்பதாகவும் உறுதியளித்தது. ஆக அரசின் பெரிய தூண்டுதல் நடவடிக்கை மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலையினை ஆதரிக்கின்றன. இது பெரும்பாலும் நாணய குறைப்பு மற்றும் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாக கருதப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

இரண்டாவது நாளாக சர்வதேச சந்தையில் சரிவினை கண்டு வரும் தங்கத்தின் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 5.25 டாலர்கள் குறைந்து, 1734.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.28 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த சில தினங்களாக ஃபெடரல் வங்கி ஏதேனும் ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்குமா? வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது இரண்டாவது நாளாக சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று வெள்ளியின் விலையானது 0.232 டாலர்கள் குறைந்து, 17.660 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 1.26 சதவீத வீழ்ச்சியாகும். நடப்பு வாரத்தில் வெள்ளி விலையானது ஒரு நாள் ஏற்றம் கண்டாலும், மறுநாள் வீழ்ச்சி கண்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையான எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது கடந்த நான்கு தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 274 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 47140 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.58 சதவீத வீழ்ச்சியாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளின் விலையானது அப்படியே தங்கத்திற்கு எதிர்மாறாக உள்ளது. ஏனெனில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த நிலையில், இன்றும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்றும் கேப் டவுனில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. தற்போது வெள்ளியில் விலையானது 630 ரூபாய் குறைந்து 48,001 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 1.30 சதவீத வீழ்ச்சியாகும்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், இன்று இன்னும் விலையில் மாற்றம் காணவில்லை. எனினும் நேற்றைய விலை நிலவரம். கிராமுக்கு தங்கம் விலையானது 4537 ரூபாய்க்கும், இதே சவரன் தங்கம் விலையானது 36,296 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளி விலையினை பொறுத்தவரையில், வியாழக்கிழமையன்று சென்னையில் கிராமுக்கு 48.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 48,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. எனினும் இன்றைய விலையில் இன்னும் மாற்றம் காணப்படவில்லை. கடந்த இரண்டு தினங்களாக ஏற்றம் கண்டு வரும் வெள்ளி விலையானது, இன்று விலையில் இன்னும் மாற்றம் காணவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+