சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையும் குறைவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, நேற்றைய பலமான ஏற்றத்திற்கு பிறகு இன்று சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகிறது.

 

இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டாலரின் மதிப்பு சற்று வலுவிழந்துள்ள நிலையிலும் சரிவில் காணப்படுகிறது. இதே இந்திய சந்தையிலும் ரூபாயின் மதிப்பானது சற்றே சரிவிலேயே காணப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வருகின்றது. எனினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் உள்ளிட்ட சில காரணங்களினால் சரிவினைக் கண்டு வருகிறது. எப்படியிருப்பினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இதெல்லாம் பார்க்கலாம்?

இதெல்லாம் பார்க்கலாம்?

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம், வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக விலை அதிகரித்தே காணப்படுகிறது. எனினும் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5.25 டாலர்கள் குறைந்து, 1752.85 டாலர்களாக காணப்படுகிறது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்
 

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 0.66% சரிந்து, 24.415 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட சற்று கீழாகத் தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் தொடர்ச்சியாக மூன்று வர்த்தக அமர்வுகளுக்கு பிறகு, இன்று தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 87 ரூபாய் குறைந்து, 46,751 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 46,838 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 46,766 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறைவதற்கான சிக்னலையே கொடுத்துள்ளது. எனினும் நீண்டாக நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது, மூன்று தினங்களுக்கு பிறகு சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 290 ரூபாய் குறைந்து, 67,211 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் 67,501 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று 67,181 ரூபாயாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 42 ரூபாய் அதிகரித்து 4,387 ரூபாயாகவும், சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்து, 35,096 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இன்றோடு 3 தினங்களாகவே அதிகரித்து வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 4,790 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,320 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 47,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவும் தொடர்ச்சியாக 3 நாள் ஏற்றம் கண்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது சற்று அதிகரித்தே விற்பனையாகி வருகின்றது. தற்போது கிராமுக்கு 0.80 பைசா அதிகரித்து 72.10 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து 72,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளி விலையும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வருகின்றது.

வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்பட்டாலும், இந்த வார உச்சத்திலேயே காணப்படுகிறது. அதோடு வலுவாக 1751 டாலர் என்ற நிலையிலேயே காணப்படுகிறது. நிபுணர்கள் தொடர்ச்சியாக 1760 டாலர்களை உடைத்தால் சற்று அதிகரிக்கும் என்று கூறி வரும் நிலையில், நேற்று அதிகபட்சமாக 1758 டாலர்கள் உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் தற்போது சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. வார கேண்டில் பேட்டர்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுவதால், 1760 உடைக்கும் பட்சத்தில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பில் அழுத்தம்

டாலரின் மதிப்பில் அழுத்தம்

அமெரிக்க பத்திர சந்தைகள் சற்று சரிவினைக் கண்டுள்ள நிலையில், டாலரின் மதிப்பு சற்று அழுத்தத்தினை கண்டுள்ளது. அதொடு அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், வட்டி விகிதத்தினை அப்படியே வைத்துக் கொள்ள விரும்புவதாக கூறியுள்ளதையடுத்து, இதனால் பணவீக்க அழுத்தங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதோடு தங்கம் விலையானது நிபுணர்கள் கூறியது போல், 1760 டாலர்களை நெருங்கி காணப்படுகிறது. விரைவில் இந்த லெவலை உடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உடைத்தால், அதே வேகம் சந்தையில் தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், 1680 டாலர் என்பது கடுமையான ஆதரவான விலையாகவும் பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவலை

முதலீட்டாளர்கள் கவலை

தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து காணப்பட்டாலும், அதிகரித்து வரும் வைரஸ் தாக்கம் என்பது கவலையளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளையும் மீண்டும் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆக இது தங்கம் விலைக்கு ஆதரவாகவே உள்ளது. குறுகிய கால நோக்கில் தங்கத்தின் விலையானது சற்று சரியலாம் என்றாலும், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் இருந்து வருகின்றது. அதோடு உச்சத்தில்; இருந்து தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படும் நிலையில், குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் குறித்த கவலை?

பொருளாதாரம் குறித்த கவலை?

பொருளாதாரம் தற்போது தான் சற்று மீண்டு வர ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பின் காரணமாக, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கலாம். இதனால் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பது போலவே அனைத்து காரணிகளும் சாதகமாக உள்ளன. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, ஏற்றம் காணுவது போலவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் தற்போதே வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today fall after big gain in comex market

Gold price update.. Gold prices today fall after big gain in comex market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X