தங்கம் விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சரிவில் காணப்படுகின்றது. இன்று மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியானது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை மெதுவாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தங்கம் விலையானது 1900 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து 18% ஏற்றத்தில் காணப்படுகிறது. இது தொடர்ந்து பணவீக்கம் உச்சத்தில் காணப்படும் நிலையில், இது சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம்.
தங்கம் விலை உச்சம்
கடந்த 2020ல் 2069.89 டாலர்களை எட்டிய நிலையில், நடப்பு ஆண்டில் மீண்டும் அந்த உச்சத்தினை எட்டலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தொடர்ந்து அதிகளவிலான விகிதம், பத்திர சந்தை என பல காரணிகளுக்கு மத்தியில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மேற்கொண்டு டாலரின் மதிப்பு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
எதிர்பார்ப்பு
தொடர்ந்து டாலரின் மதிப்பு உச்சமானது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 2100 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசசன் அச்சம்
தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
முக்கிய லெவல்
எப்படியிருப்பினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 1870 - 1900 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சரிவினைக் கண்டால், 1800 டாலர்களை கூட எட்டலாம். அதனையும் உடைத்தால் 1730 டாலர்களை எட்டலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம்
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.65 டாலர்கள் குறைந்து, 1915.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை சற்று குறையலாம் எனும் விதமாகவே காணபப்படுகின்றது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் சற்று குறையும்போது வாங்கலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது சற்று அதிகரித்து, 24.392 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது சற்று குறைந்து, 56,463 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 31 ரூபாய் அதிகரித்து, 69,817 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 5305 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 42,440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 5787 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து, 57,870 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 75.30 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 75,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications