Gold Price Update: இரண்டு நாட்களுக்கு பிறகு தங்கம் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. இன்னும் குறையுமா?

முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தங்கம் விலையானது, இரண்டு நாட்கள் ஏற்றத்திற்கு இன்று சரிந்து வருகிறது.

இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், தற்போது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கொரோனா அதிகரித்தாலும், விரைவில் மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அதோடு பொருளாதாரத்தினையும் விரைவில் மீட்க முடியும் என்றும் முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது இன்று சரிவில் காணப்படுகிறது.

இதெல்லாம் பார்க்கலாம்?

இதெல்லாம் பார்க்கலாம்?

சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை எப்படி உள்ளது? இந்திய சந்தையில் எப்படி உள்ளது? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கியமான சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? இன்று வாங்கலாமா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், இரண்டு அமர்வுகளுக்கு பிறகு இன்று சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இன்றோடு மூன்று வர்த்தக அமர்வுகளிலும், தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.15 டாலர்கள் குறைந்து, 1722.20 டாலர்களாக காணப்படுகிறது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்கத்தினை போலவே, வெள்ளியின் விலையிலும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 1.11% சரிந்து, 24.670 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

MCX தங்கம் விலை நிலவரம்

MCX தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் இரண்டு வர்த்தக அமர்வுகளுக்கு பிறகு, இன்று தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 113 ரூபாய் குறைந்து, 45,297 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 45,418 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 45,349 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலை சற்று குறைவதற்கான சிக்னலையே கொடுத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 534 ரூபாய் குறைந்து, 64,555 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் 65,089 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று 64,800 ரூபாயாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து 4,260 ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து 34,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கடந்த 5 தினங்களாகவே சற்று அதிகரித்து வந்த நிலையில், இன்று ஆறுதலை கொடுக்கும் விதமாக குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

தூய தங்கம் (24 கேரட் தங்கம் விலை ) விலையும் இன்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 4,648 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 37,184 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 46,480 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவும் தொடர்ச்சியாக 5 நாள் ஏற்றத்திற்கு பிறகு இன்று சற்று குறைந்து காணப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியில் விலையானது சற்று அதிகரித்தே விற்பனையாகி வருகின்றது. தற்போது கிராமுக்கு 0.19 பைசா அதிகரித்து 69.90 ரூபாயாகவும்,. இதே கிலோவுக்கு 190 ரூபாய் அதிகரித்து 69,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

உச்சத்தில் இருந்து சரிவு தான்

உச்சத்தில் இருந்து சரிவு தான்

தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராம் தங்கம் விலையானது சுமார் 11000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகின்றது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு சுமார் 5000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்க பத்திர லாபமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கத்தின் முக்கிய லெவல்கள்

தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டு இருந்தாலும், அதன் முக்கிய லெவல்களான 1760 டாலர்கள், 1660 டாலர்களையும் உடைத்துக் காட்டவில்லை. இது சந்தை ஒரு ரேஞ்சுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. இதே இந்திய சந்தையில் 44,100 சப்போர்ட் லெவலாகவும், இதே 46150 ரெசிஸ்டன்ஸ் லெவலாகவும் பார்க்கப்படுகிறது.

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

டாலரின் மதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க பத்திர சந்தைகள் ஏற்றத்தினை அடுத்து, மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச பங்கு சந்தைகள் சற்றே வலுவடைந்துள்ளன. இதனால் தங்கத்தின் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. எனினும் அமெரிக்கா அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன, இது தடுப்பூசிகளுக்கு மத்தியில், அதிகளவிலான பணப்புழக்கம் உள்ளிட்ட பல காரணிகளாக வளர்ச்சி கண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

நீண்டகால நோக்கில் தங்கம்

நீண்டகால நோக்கில் தங்கம்

குறுகிய கால நோக்கில் தங்கத்தின் விலையானது சற்று சரியலாம் என்றாலும், பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் இருந்து வருகின்றது. அதோடு உச்சத்தில்; இருந்து தங்கம் விலையானது பலமான சரிவில் காணப்படும் நிலையில், குறைந்த தங்கம் விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் என்னவாகும்?

பொருளாதாரம் என்னவாகும்?

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பினை காரணம் காட்டி, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இதனால் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

இன்று விலை நிலவரம் எப்படி இருக்கும்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டாலும், தற்போது வெளியாகி வரும் சில காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. அதோடு டெக்னிக்கலாகவும் குறுகிய கால நோக்கில் விலை குறையலாம், என்பது போல் தான் பேட்டனும் பார்ம் ஆகியுள்ளது. ஆக அதற்கேற்றாற்போல் முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+