சரியும் தங்கம் விலை.. இரண்டாவது நாளாக நல்ல வாய்ப்பு.. இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இரண்டாவது அமர்வாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏனெனில் குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க முடியுமே. தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், வெள்ளி விலையானது சற்றே அதிகரித்து காணப்படுகிறது.

அதோடு கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 11,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு

குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு

ஆக குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினை இது தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தினை கண்டாலும் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1760 டாலர்களை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது இன்னும் அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இது 1660 டாலர்களை உடைத்தால் மேலும் சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் நிலவரம் என்ன? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? முக்கிய லெவல்கள் என்ன? என பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

XAUUSD தங்கம் விலை

XAUUSD தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது முந்தைய அமர்வில் சற்று சரிவில் முடிவடைந்த நிலையில், இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து, 1724.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

comex வெள்ளி விலை

comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.57% அதிகரித்து, 25.190 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் குறையும் விதமாக காணப்படுகிறது. இதனால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 161 ரூபாய் குறைந்து, 44,534 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது, நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். அதோடு தங்கத்தின் தற்போதைய கரண்ட் காண்டிராக்ட், ஏப்ரல் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் இதனையும் கவனத்தில் கொண்டு வாங்கலாம்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 156 ரூபாய் அதிகரித்து, 65,018 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்ன் சற்று சரிவில் இருப்பதால், சந்தை திங்கட்கிழமை தொடக்கத்தினை பொறுத்து மாறலாம். ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றம் காணாவில்லை. எனினும் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 4,216 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 33,728 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே 24 கிராம் தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4,600 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து, 36,960 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றம் காணாத நிலையில் இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 0.10 பைசா அதிகரித்து, 69.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே கிலோவுக்கு இன்று 100 ரூபாய் அதிகரித்து 69,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு தினங்களாக சற்று குறைந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.

அமெரிக்க பத்திர சந்தை

அமெரிக்க பத்திர சந்தை

அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர லாபமானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்னும் பல சர்வதேச காரணிகளால், டாலரின் மதிப்பு வலுவாக காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது. எனினும் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது, பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம். இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்தின் தேவை

பாதுகாப்பு புகலிடத்தின் தேவை

சர்வதேச அளவில் பல நாடுகளிலும் மீண்டும் கொரோனா பரவலானது வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஆக இது முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடுகளை செய்யத் தூண்டுகிறது. அதோடு சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இந்த ஆண்டில் இதுவரையில் 9% குறைந்துள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம். அதோடு அதிகரித்து வரும் பத்திர லாபமானது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. மேலும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 11,600 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு இன்னும் சில வாரங்களில் ஏப்ரல் காண்டிரக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த காண்டிராக்டில் வாங்குவது நல்லது. ஆக முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யும் போது தங்கம் விலையானது மேற்கொண்டு சரியவே வாய்ப்புகள் அதிகம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருப்பது நல்லது. எனினும் நீண்ட கால நோக்கிலும் தங்கத்தினை வாங்கலாம். அதுவும் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today fall again, down Rs.11,600 above from august record high

Gold price update.. Gold prices today fall again, down Rs.11,600 above from august record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X