தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இனியும் சரியுமா?

தங்கம் விலையானது மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக முதலீட்டாளர்கள் உன்னிப்பாக சந்தையை கவனித்து வருகின்றனர் எனலாம்.

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது தற்போது அவுன்ஸூக்கு 1900 டாலர்களுக்கு அருகில் காணப்படுகின்றது. இது முக்கிய லெவலாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் தரவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்பட்ட நிலையில், இதனை குறைக்க மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இது தங்கம் விலையை ஊக்குவித்து வருகின்றது. இதற்கிடையில் இன்று வெளியாகவிருக்கும் நுகர்வோர் குறித்தான குறியீட்டினை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். இது டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தொடர்ந்து வட்டி அதிகரிப்பு

தொடர்ந்து வட்டி அதிகரிப்பு

தொடர்ந்து 4 முறையாக அமெரிக்காவின் மத்திய வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை குறையுமா?

இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். எனினும் தொடர்ந்து அதிகரிக்கும் வட்டி விகிதம் மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் அதிகரிக்க வழிவகுக்கலாம்.

 நீண்டகால நோக்கில் என்ன நிலவரம்?

நீண்டகால நோக்கில் என்ன நிலவரம்?

இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய வரலாற்று உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இது மேற்கொண்டு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகரித்து வரும் ரெசசன் அச்சம், ரூபாய் சரிவு, என பல காரணிகளுக்கும் மத்தியில் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம். தொடர்ந்து கொரோனா அச்சமும் இருந்து வருகின்றது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 9.75 டாலர்கள் குறைந்து, 1900.25 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு குறையும்போது வாங்க சரியான வாய்ப்பாக அமையலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 24.087 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 183 ரூபாய் குறைந்து, 56,169 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 69,241 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5295 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 42,360 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 5776 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 57,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 50 பைசா குறைந்து, 74.80 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 74,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+