சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கி வைக்கலாமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே, தொடர்ச்சியாக பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாகவே உள்ளது.

 

பொதுவாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது, கடந்த சில வாரங்களாகவே, அவ்வப்போது சற்று சரிவினைக் கண்டாலும், மொத்தமாக பார்க்கும் போது ஏற்றத்தில் தான் இருந்து வருகிறது.

அதிலும் புத்தாண்டிற்கு பிறகு தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ச்சியாக இப்படியே ஏற்றம் கண்டு வருகிறதே? இனி குறையவே குறையாதா? இப்போது வாங்குவது சரியான விஷயமாக இருக்குமா? என்று பல கேள்விகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தன.

சிகரெட் விற்பனை மீது புதிய மசோதா..? வரி, வயது வரம்பு, அபராதம் உயரும் அபாயம்..!சிகரெட் விற்பனை மீது புதிய மசோதா..? வரி, வயது வரம்பு, அபராதம் உயரும் அபாயம்..!

இன்று என்வெல்லாம் பார்க்க போகிறோம்?

இன்று என்வெல்லாம் பார்க்க போகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன நிலவரம்? இது இப்படியே நீடிக்குமா? இனி எப்படி இருக்கும். நிபுணர்களின் கணிப்பு என்ன? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம். தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டு வருகின்றதே என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

கடந்த சில அமர்வுகளாக தொடர்ச்சியாக செம ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று சரிவில் உள்ளது. தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6 டாலர்கள் குறைந்து 1948.45 டாலர்களாக காணப்படுகிறது. நேற்றைய முடிவில் தங்கம் விலையானது 1954.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1953.90 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
 

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது தற்போது 0.62% குறைந்து, 27.470 டாலர்களாக காணப்படுகிறது. நேற்று வெள்ளியின் விலையானது 27.640 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 27.745 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியில் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்திருந்து முதலீடு செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 177 ரூபாய் குறைந்து, 51,543 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று தங்கம் விலையானது 51,720 ருபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 51,555 ரூபாயாகவே தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தங்கம் விலை இன்னும் சரிவினைக் காணலாம் போல காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

இதே போல வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையில் தடுமாற்றத்தில் உள்ள நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளி விலை சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 584 ரூபாய் குறைந்து, 70,274 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையை பொறுத்த வரையில் 70,858 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 70,323 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் சரிவினை காணும் விதமாக காணப்படுகிறது. ஆக இந்திய சந்தையில் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றம்

அமெரிக்க பங்கு சந்தைகள் ஏற்றம்

அமெரிக்க பங்கு சந்தைகளில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், நேற்றைய முடிவில் சற்று ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. இது சற்றே டாலருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று சரிவில்
காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வரும் தங்கம் விலையின் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புராபிட் புக்கிங்கும் செய்து வருகின்றனர், இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டு வருகின்றது.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி செய்யும் நோக்கத்துடன், டிரம்ப் ஜார்ஜியா அமைச்சருடன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பலத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது சற்று அழுத்தத்தினை கண்டு வருகின்றது.

ஜோ பிடனுக்கு ஆதரவு

ஜோ பிடனுக்கு ஆதரவு

தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகும் டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத நிலையில், டிரம்பின் ஒவ்வொரு செய்கையும் பிடனுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன. இதற்கிடையில் பிடனின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தடபுடலாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஜோ பிடனுக்கான ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பிடனின் நடவடிக்கைகள் இன்னும் எளிதாகலாம். எந்தவொரு முடிவினையும் விரைவில் செயல்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவினை காண வழிவகுத்துள்ளது.

தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடம்

தங்கம் ஒரு பாதுகாப்பு புகலிடம்

எனினும் பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கு மூன்றாவது முறையாக முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மற்ற நாடுகளிலும் புதிய வகை கொரோனா பரவல் இருக்குமோ? என்ற பயமும் எழுந்துள்ளது. அப்படி வந்தால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயமும் எழுந்துள்ளது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. தங்கத்தின் அதிக விலை சரிவினை இது கட்டுப்படுத்துகிறது.

வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு

வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் கடந்த முறையே வட்டி குறைப்பு இன்னும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. அப்படி குறைக்கப்பட்டால் அது டாலரின் மதிப்பில் எதிரொலிக்கும். இது தங்கம் விலையில் மாற்றத்தினை கொண்டும் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices today fall as investors book profits

Gold price updates.. gold prices today fall as investors book profits
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X