மூன்றாவது நாளாக சரியும் தங்கம் விலை.. இது சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக தற்போது சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது சாமானியர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 

கடந்த வாரங்களில் இருந்த ஏற்றத்தினை பார்த்து விலை குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் இப்படியே அதிகரிக்கும். நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் உச்சத்தினை தொட்டு விடுமோ?

ஏனெனில் சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் தங்கம் விலையானது, மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. நிபுணர்களின் மீடியம் டெர்ம் இலக்குகளை எல்லாம் தாண்டி வர்த்தகமாகியது. ஆனால் இவற்றிற்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக தங்கம் விலையானது இன்றோடு மூன்றாவது நாளாக சரிய ஆரம்பித்துள்ளது. அதெல்லாம் சரி இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கத்தின் விலை என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் மூன்றாவது நாளாக இன்று மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 2.25 டாலர்கள் குறைந்து, 1893.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையும், இன்றைய தொடக்க விலையும் ஒரே விலையாகத் தான் உள்ளது. அதோடு நேற்றைய குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.51% குறைந்து, 27.797 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் 27.200 என்பது முக்கிய லெவலாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை
 

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 146 ரூபாய் குறைந்து, 48,435 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஜூன் 4 அன்று நடப்பு காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 560 ரூபாய் குறைந்து, 71,159 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், தற்போது கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 4,598 ரூபாயாகவும், சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 36,784 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ச்சியாக இன்றோடு 5 நாட்களாக அதிகரித்த நிலையில், இன்றோடு இரண்டாவது நாளாக சற்று குறைந்து காணப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, 5,016 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,128 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக 5 நாட்களாகவே ஏற்றம் கண்ட நிலையில், தற்போது குறைந்துள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

தங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளியின் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 0.40 பைசா அதிகரித்து, 76.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 76,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது நேற்று சற்று குறைந்திருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரிப்பு

கொரோனா தாக்கம் அதிகரிப்பு

உலகின் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பணவீக்க விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக பணவீக்கத்திற்கு எதிராக ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

எப்படியிருப்பினும் அதிகரித்து வரும் பத்திர லாபம் மற்றும் டாலர் மதிப்பு, பொருளாதார மீட்சி, பங்கு சந்தைகள் ஏற்றம் என சில காரணிகள், தங்கம் விலையேற்றத்தினை தடுக்கலாம். இதற்கிடையில் இன்று வெளியாகவிருக்கும் பணவீக்கம் குறித்த டேட்டாவினையும், முதலீட்டாளார்கள் கவனிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1875 டாலர்களையும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக கருத்தப்பட்ட, 1925/1970 டாலர்கள் என்ற லெவலையும் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒரு வேளை தங்கத்தின் சரிவு தொடர்ந்தால், 1845 டாலர்களையும் தொடலாம். அதன் பிறகும் சரிவு தொடர்ந்தால், 1810 டாலர்களை கூட தொட வாய்ப்புள்ளது. எப்படியிருப்பினும் இன்றைய டேட்டா விகிதம் தங்கம் விலையில் முக்கிய காரணியாக இருக்கும்.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், அமெரிக்காவின் பணவீக்க டேட்டாவினை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today fall for 3rd in a row, silver also fall today

Gold price latest updates.. Gold prices today fall for 3rd in a row, silver also fall today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X