அடடே.. நான்காவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..!

இந்த ரனகளத்திலும் இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்துகிட்டு இருக்கா? அடடே இது மிக நல்ல விஷயமாச்சே.

கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கித் தவித்து வரும் நாடுகள் ஒரு புறம் மக்களை காப்பாற்றவும், அதன் பொருளாதாரங்களை காப்பாற்றவும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதிலும் உலகின் முன்னணி பொருளாதாரமும் வல்லரசு நாடான அமெரிக்காவும் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தைகள் அதிகமாக வீழ்ச்சியடைவது குறைந்துள்ளது எனலாம்.

தேவை குறைந்து வருகிறது

தேவை குறைந்து வருகிறது

எனினும் ஒரேடியாக சந்தைகள் வீழ்வதை நிறுத்தவில்லை. ஓருபுறம் அனைத்து சர்வதேச நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது கொரோனா. இதனால் அங்கு தங்கத்தின் தேவையானது சற்று குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்த கொடூரமான தொற்று நோய் உலகின் மிகப்பெரிய நுகர்வோரான மிகப்பெரிய சந்தையினை கூட தற்போது ஆட்டிப்படைத்து (இந்தியாவினை) வருகிறது.

ரஷ்ய தங்கம் வாங்குவதை நிறுத்த ஆலோசனை

ரஷ்ய தங்கம் வாங்குவதை நிறுத்த ஆலோசனை

கொரோனாவின் தாக்கத்திற்கு பயந்து பல நாடுகளும் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளன. இதனையடுத்து ரஷ்ய மத்திய வங்கி தங்கம் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் சீனா நுகர்வோர் ஐந்தில் ஒரு பங்கு தங்கத்தினை 4,356 டன் தங்கத்தினை கொண்டிருந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்

தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்

எனினும் தற்போது உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், அது தங்க வர்த்தகத்தினை பாதிக்கும் என்றும், இதனால் பிசிகல் தங்கத்தின் தேவை குறையலாம் என்றும் கோட்டக் செக்யூரிட்டீஸ் தனது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. எனினும் கொரோனாவால் ஏற்படும் தாக்கத்தினை குறைக்க, முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி சார்பாக எடுக்கும் நடவடிக்கைகள் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

வைரஸின் தாக்கம் அதிகரிப்பது அமெரிக்கா டாலரின் மதிப்பை அதிகரிக்கக் கூடும், ஏனெனில் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் மத்திய வங்கி இன்னும் சில நிதி சலுகைகளை வழங்கக்கூடும். இதனால் அது டாலரினை ஆதரிக்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்ல அமெரிக்கா கரூவூலப் பத்திரங்கள் இருப்புக்களை கடன்களுக்கான பரிமாறிக் கொள்ளவும் அனுமதித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த மூன்று தினங்களாகவே வீழ்ச்சி கண்டு வந்த தங்கத்தின் விலையானது, இன்று காலையிலும் வீழ்ச்சியிலேயே தொடங்கியது. நேற்றைய வர்த்தக முடிவில் அவுன்ஸூக்கு 1,596.60 டாலராக இருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலேயே 1592.15 டாலராக தொடங்கியது. அதாவது நேற்றைய முடிவில் இருந்து 4.45 டாலர்கள் குறைந்து தான் வர்த்தகமே தொடங்கியது. எனினும் தற்போது சற்றும் அதிகரித்து 1598.30 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய காமாடிட்டி சந்தையில் தங்கம் விலை சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது தங்கம் விலையானது 181 ரூபாய் குறைந்து 42,775 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 0.42% வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த நான்கு தினங்களில் இரண்டு நாட்கள் வீழ்ச்சி கண்டும், இரண்டு நாட்கள் சற்று ஏற்றமும் கண்டுள்ளது. எனினும் கடந்த நான்கு வர்த்தக தினங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலை பெரிதும் மாற்றம் காணவில்லை என்றே கூறலாம். எனினும் இன்று வெள்ளியின் விலையானது 0.59% வீழ்ச்சி கண்டு 14.070 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று வீழ்ச்சி கண்டே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ளியின் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை 8 ரூபாய் குறைந்து, 39,515 ரூபாயாகவும் வர்த்தகமாகியும் வருகிறது. சர்வதேச சந்தையினை போலவே கடந்த 4 சந்தை தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்க ஆபரணம் விலை

தங்க ஆபரணம் விலை

இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் தங்க ஆபரணத்தின் விலையானது தொடர்ந்து பெரியளவில் மாற்றமில்லாமல் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 3952 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,616 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த இரண்டு தினங்களாகவே தங்கம் விலையானது சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி ஆபரணம் விலை

வெள்ளி ஆபரணம் விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றாமில்லாமல் தான் உள்ளது. இன்று கிராமுக்கு 39.49 ரூபாயாகவும், கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 39,490 ரூபாயாகவும் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாகவே வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், கிலோவுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் என சிறு அளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+