தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 4வது நாளாக.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..!

கொரோனாவால் உலகம் முழுக்க மக்கள் அவதிப்பட்டு வரும் அதே வேளையில், ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் தகுதிற்கு ஏற்ப பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் வளர்ந்து வரும் நம் நாட்டில் கொரோனாவால் சிதைந்து வரும் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, மொத்தம் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தினை அறிவிக்க உள்ளதாக பிரதமர் மோடி செவ்வாய்கிழமையன்று தனது உரையாடலில் கூறினார்.

இந்த 20 லட்சம் கோடியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்பு சலுகைகளும் சேர்த்து என்றும் அப்போது கூறியிருந்தார்.

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை

ஆக இது நலிந்து போயுள்ள பொருளாதாரத்தினை நிச்சயம் மீட்டெடுக்க உதவும் என்ற நம்பிக்கையில், இந்திய பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று சற்றும் கண்டுள்ளது. இதன் விளைவாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இன்று நான்காவது நாளாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் ஊக்குவிப்பு நடவடிக்கை வரலாம்

அமெரிக்காவில் ஊக்குவிப்பு நடவடிக்கை வரலாம்

லைவ் மிண்டில் வெளியான செய்தி ஒன்றில், இன்று காலையில் ரூபாயின் வலிமை காரனாமாகவே தங்கம் விலையானது சற்று சரிவுடன் தொடங்கியது. அது மட்டும் அல்ல அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை ஊக்குவிக்க மீண்டும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்தான பேக்கேஜ் விரைவில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்தது.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த திங்கட்கிழமையன்று சரிவில் முடிவடைந்திருந்தாலும், செவ்வாய்கிழமையன்று சற்று ஏற்றம் கண்டது. எனினும் தற்போது அவுன்ஸூக்கும் 4.40 டாலர்கள் குறைந்து, 1702.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்று காலையில் சற்று ஏற்றம் கண்ட நிலையில் தற்போது சற்று விலை குறைந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை எதிரொலியாகவும், ரூபாயின் வலிமையாலும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக நான்காவது நாளாக சரிந்து வருகிறது. இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய தங்கம் விலையானது, தற்போது பெரியளவில் மாற்றமில்லாமல் 10 கிராம் தங்கத்தின் விலையானது 13 ரூபாய் குறைந்து 45,612 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து வருகிறது. தற்போது 0.68% குறைந்து 15.602 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று வர்த்தக தினங்களாக தங்கத்தின் விலையானது பெரிய அளவில் மாற்றமில் இருந்தாலும் தொடர்ந்து சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிந்து வருகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 190 ரூபாய் குறைந்து 42,864 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையினை போலவே கடந்த மூன்று தினங்களாகவே பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், வெள்ளியின் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையில் தங்க ஆபரண விலை

சென்னையில் தங்க ஆபரண விலை

சென்னையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து 4,437 ரூபாய்க்கும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 35,496 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே கடந்த மூன்று தினங்களாகவே தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் விலை குறைந்து காணப்பட்டாலும், தூய தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றமில்லாமல் 8 கிராம் 37,920 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி ஆபரண விலை

வெள்ளி ஆபரண விலை

சென்னையில் இன்று வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றம் இல்லாமல் கிராமுக்கு 42.95 ரூபாயாகவும், இதோ கிலோ வெள்ளியின் விலையானது 50 ரூபாய் குறைந்து 42,950 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் கடந்த மூன்று தினங்களாகவே சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+