தங்கம் விலையானது உள்நாட்டு சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ந்து 5வது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது வார தொடக்கத்தில் 52000 ரூபாய் வரையில் உச்சம் தொட்ட நிலையில், இன்று 50,838 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது.
இதே வெள்ளி விலையானது 57,304 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பணவீக்கம் விகிதமானது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு முறை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றாலும், சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், உலக பொருளாதார மந்த நிலை, ரெசசசன் குறித்த அச்சம் என பலவும் சந்தையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் குறைந்த விலையில் இருக்கும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இந்த வாரத்தில் மட்டும் இதுவரையில் தங்கம் விலையானது 1.5% சரிவில் காணப்படுகின்றது.
வெள்ளியின் தேவை
வெள்ளி விலையும் 18.81 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. சீனாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் காரணமாக அங்கு, வெள்ளியின் தேவையும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் தற்போது விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளியின் தேவையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது பெரியளவில் விலை குறையாமல் தடுக்கலாம்.
வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்
எனினும் கடந்த வியாழக்கிழமையன்று வெளியான அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான தரவானது மீண்டும் அதிகரித்துள்ளது. இது மீண்டும் வட்டி விகித அதிகரிப்பினை தூண்டலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம் என்றாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
முக்கிய லெவல்
மீடியம் டெர்மில் தங்கம் விலையானது 1660 - 1674 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த லெவலில் இருந்து மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 1700 மேலாக வலுவாக இருந்தால் மீண்டும் அழுத்தம் காண வழிவகுக்கலாம். இது அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி அதிகரிப்பால் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4735 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 5165 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 224 ரூபாய் குறைந்து, 41,320 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 280 ரூபாய் குறைந்து, 51,650 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.47,350
மும்பை - ரூ.46,750
டெல்லி - ரூ.46,900
பெங்களூர் - ரூ.46,800
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,350
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications