தங்கம் விலை குறைவா.. எவ்வளவு? இன்னும் குறையுமா? இப்போது வாங்கி வைக்கலாமா?

பொதுவாக அட்சய திருதியை என்றாலே நம் மக்கள், எப்படியாவது ஒரு பொட்டு தங்கமேனும் வாங்கிவிட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் இந்த முறை லாக்டவுன் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடைகளுக்கு சென்று தங்கம் வாங்குவது முடியாத காரியம் ஆகி விட்டது.

எனினும் ஆன்லைனில் விற்பனை களைகட்டியது என்றே கூறலாம். மேலும் பல வகையான தள்ளுபடிகளையும் சலுகையும் காண முடிந்தது. அது சரி இன்றைய தங்க நகை விலை நிலவரம் என்ன? கூடிருக்கா? குறைஞ்சிருக்கா? வாங்க பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், சர்வதேச காமெக்ஸ் சந்தையில் அவுன்ஸூக்கு 1.80 டாலர் அதிகரித்து 1,737.10 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே இன்று காலையில் 1743.60 டாலராக தொடங்கிய சந்தையானது, இன்று குறைந்தபட்சமாக 1729.45 டாலர் வரையில் குறைந்து வர்த்தகமாகியுள்ளது. எனினும் தற்போது சற்று கொஞ்சம் அதிகரித்து 1738 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் சந்தை

எம்சிஎக்ஸ் தங்கம் சந்தை

சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்திருந்தாலும், இந்திய எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 128 ரூபாய் குறைந்து, 46,395 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த நான்கு நாளுக்கு பிறகு இன்று இது முதல் வீழ்ச்சியாகும். கடந்த மூன்று சந்தை தினங்களில் 1,300 ரூபாய் ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை கடந்த நான்கு சந்தை தினங்களாகவே தொடர்ந்து அதிகளவில் மாற்றம் இல்லாமல் ஏற்றம் கண்டு வருகிறது. இன்று மட்டும் தற்போது வரையில் 0.52% அதிகரித்து 15.345 டாலர்களாக வர்த்தகமாகியது. சீனாவில் தற்போது படிப்படியாக தொழில் சாலைகள் வேலை செய்ய ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், வெள்ளிக்கான தேவையானது இதுவரை அதிகரித்ததாக தெரியவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாகவே தங்கம் விலையானது ஓரிரு நாட்கள் தவிர விலை பெரிய மாற்றம் இல்லை.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை அதிகரித்து இருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது 44 ரூபாய் குறைந்து, 42,675 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் வெள்ளியின் விலையானது ஒரு நாள் ஏற்றம் கண்டால், அடுத்த நாள் வீழ்ச்சி கண்டும் வருவதாகத் தான் உள்ளது.

தங்கம் ஆபரணம்

தங்கம் ஆபரணம்

ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில் ( 22 கேரட் தங்கத்தின்) கிராமுக்கு 247 ரூபாய் அதிகரித்து 4,509 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சவரனுக்கு 1976 ரூபாய் அதிகரித்து 36702 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 107 ரூபாய் அதிகரித்து 4,593 ரூபாயாகவும், சவரனுக்கு 856 ரூபாய் அதிகரித்து 36,744 ரூபாயாகவும் உள்ளது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளியினை பொறுத்த வரையில் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. கிராமுக்கு 42.61 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 42,610 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளி விலையானது கடந்த ஐந்து தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வரும் நிலையில், சில மாநிலங்களில் மட்டும் லாக்டவுனினை தளர்த்தலாம் என்ற கூறப்பட்டு வருகிறது. இதனால் அங்கு அதன் மூலம் சற்று பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கையில் பங்கு சந்தையில் சற்று மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.

ஏன் அதிகரிப்பு?

ஏன் அதிகரிப்பு?

கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் தங்கம் விலையானது 40% அதிகரித்தது. சொல்லப்போனால் கடந்த ஒரு வருடத்தில் மிக ஆக்ரோஷமாக இருந்தது எனலாம். மேலும் இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்காக பயன்படுத்தப்படுவதால், முதலீட்டாளர்களின் சொத்துக்களை காப்பாற்றும் சிறந்த பாதுகாப்பு புகலிடமாக திகழ்கிறது. இதனால் தங்கம் விலையானது இந்த நெருக்கடியான காலத்திலும் கூட உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+