பலத்த சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றோடு நான்காவது நாளாக தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு என்பது, தங்க ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

என்ன தான் தங்கம் விலையானது கூடினாலும், தங்கத்தின் மீதுள்ள ஆர்வம் மட்டும் மக்களுக்கு குறைந்தபாடில்லை. லாக்டவுன் சமயத்தில் கூட, மக்கள் ஆன்லைனில் வாங்கிக் குவித்ததே இதற்கு சரியான உதாரணம். அப்படி இருக்கும் பட்சத்தில் இப்போது விலை குறைந்துள்ள இந்த நேரத்தில், சொல்லவா வேண்டும். சரி வாருங்கள் இன்றைய நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

என்னவெல்லாம் பார்க்க போகிறோம்?

என்னவெல்லாம் பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் விலை நிலவரம் என்ன? இந்திய காமடிட்டி வர்த்தகத்தில் விலை என்ன? சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? இனியும் குறையுமா? இனி விலை எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். இந்த இடத்தில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்றோடு நான்காவது நாளாகவே தங்கம் விலையானது வீழ்ச்சியினை கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸுக்கு 11.90 டாலர்கள் குறைந்து, 1823.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. மேலும் கடந்த அமர்வின்போது முடிவு விலையினையும், குறைந்தபட்ச விட, இன்று சற்று கீழாக தான் தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விகிதம் 1800 டாலர்களாகும். இதனை உடைத்து சென்றால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச வெள்ளி விலை
 

சர்வதேச வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது இன்று கிட்டதட்ட 1% வீழ்ச்சி கண்டுள்ளது. நேற்று சற்று ஏற்றத்தினை கண்ட நிலையில் இன்று மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.93% குறைந்து, 26.640 டாலர்களாக குறைந்து காணப்படுகிறது. தினசரி கேண்டில் பேட்டர்னில் வெள்ளியின் விலை குறையும் விதமாக காணப்படுவதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்து காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் சரிவில் காணப்படுகிறது. நாளை பிப்ரவரி காண்டிரக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால் பெரியளவில் சரிவில் காணப்படுகிறது. இதே ஏப்ரல் மாத காண்டிரக்ட் விலையானது 10 கிராமுக்கு 227 ரூபாய் குறைந்து, 47,580 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலை தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. இது இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, இன்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 608 ரூபாய் குறைந்து, 67,953 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 68,565 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 67,783 ரூபாயாக தொடங்கியது. இது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று 4வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 46 ரூபாய் குறைந்து 4,483 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 368 ரூபாய் குறைந்து 35,864 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே 24 கிராம் தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 4,890 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 500 ரூபாய் குறைந்து 48,900 ரூபாயாகவும் உள்ளது. தூய தங்கத்தின் விலையும் கடந்த 4 தினங்களாக சரிந்து வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே கிராம் வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 72.20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கிலோவுக்கு இன்று 1,000 ரூபாய் குறைந்து 72,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் இன்றோடு மூன்றாவது நாளாக குறைந்துள்ளது.

பட்ஜெட் 2021 எதிரொலி

பட்ஜெட் 2021 எதிரொலி

பட்ஜெட் 2021ல் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை இன்றோடு கடந்த 4 நாட்களாக குறைந்து வருகின்றது. வெள்ளியின் விலையானது இன்றோடு மூன்று நாட்களாக குறைந்து வருகின்றது. இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பத்திர லாபம்

அமெரிக்க பத்திர லாபம்

அமெரிக்காவில் தொடர்ந்து பத்திர லாபம் அதிகரித்து வரும் நிலையில், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பினை குறைத்துள்ளது. இது தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதன் காரணமாக பங்கு சந்தைகளும் உச்சம் தொட்டு வருகின்றன. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் ஊக்கத்தொகை பற்றிய எதிர்ப்பார்ப்புகள், முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஏனெனில் இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு முக்கிய சப்போர்ட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க வர்த்தகர்கள், அமெரிக்க ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது. இதுவே ஆபரண தங்கம் வாங்கவும் இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என்பதால் இது விலை அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices today fall for fourth day in all row

Gold price update.. gold prices today fall for fourth day in al row
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X