பொதுவாக தங்கம் விலையானது சர்வதேச சந்தயினை பொறுத்து தான் இந்தியாவிலும் வர்த்தகமாகும். ஆனால் சில நேரங்களில் அப்படி நடக்காமலும் கூட போகலாம்.
உலகமே கொரோனாவால் கதறிக் கொண்டு இருக்கையில் தங்கம் பற்றி என்ன பேச்சு என்று கேட்கிறீர்களா?
பொதுவாக அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு நாட்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைவதை தவிர்க்க, சிறந்த ஹெட்ஜிங் ஆக இந்த தங்கம் பயன்படுகிறது.
பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை
ஆக உலகமே தற்போது அப்படி ஒரு நிலையைத் தான் கண்டு வருகிறது. இதனால் உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற ஒரு கவலை ஒரு புறம். மறுபுறம் அந்த பொருளாதாரத்தினை எப்படி மேம்படுத்தலாம் என அடுத்தடுத்த முயற்சிகள் ஒருபுறம். என்ன தான் ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் மத்திய வங்கிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.
கொரோனாவின் பிடியில் அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்காவே கொரோனாவின் பிடியில் சிக்கித் சீரழிந்து வரும் நிலையில், கடந்த வாரம் தான் பல லட்சம் கோடிகளுக்களுக்கான நிதி அறிக்கையில் கையெழுத்திட்டார் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ஆனால் அவை எந்தளவுக்கு கைகொடுக்கும் எனறு தெரியாத நிலையில் முதலீட்டாளர்கள் சந்தேகத்திலேயே உள்ளனர்.
தங்கத்தில் முதலீடு
இதனால் மாற்று முதலீடுகளை தேடி பாதுகாப்பான தங்கத்திலேயே முதலீடு செய்து வருகின்றனர். இதனாலேயே அவ்வப்போது தங்கம் விலை வீழ்ச்சி கண்டாலும், தொடர்ந்து தங்கம் விலை அதிகரிக்கவே செய்கிறது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான குறியீடு வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. இது தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பாகவே அமைந்துள்ளது.
சரியும் பொருளாதாரம்
கடந்த 2008 -2009ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியினைப் போல இந்த ஆண்டு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலை சற்று குறுகிய கால நோக்கில் குறைந்தாலும், தங்கம் விலை அவுன்ஸூக்கு 2000 டாலரை தொடலாம் என்று ஆய்வாளர்கள் கூறியது விரைவில் நடந்து விடும் போலவே.
சர்வதேச சந்தையில் விலை
கடந்த இரண்டு தினங்களாகவே சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 2.43 மணியளவில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 11.80 டாலர்கள் குறைந்து 1,625.80 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. அதிலும் நேற்றைய முடிவு விலையானது 1637.70 டாலராக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1363.60 டாலராக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து இருந்த போதிலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை தற்போது 510 ரூபாய் குறைந்து, 10 கிராம் தங்கத்தின் விலையானது 43750 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த இரண்டு தினங்களாகவே தங்கம் விலை அதிகரித்து கொண்டு தான் உள்ளது.
வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையினைப் போலவே வெள்ளியின் விலையும் 0.69% குறைந்து 14.553 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று தற்போது வரையில் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்து இருந்தாலும், அதன் எதிரொலி இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இல்லை என்றே கூறலாம். ஏனெனில் தற்போது வரையில் வெள்ளியின் விலையானது 1214 ரூபாய் அதிகரித்து 41,080 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாக விலை பெரிய அளவில் மாற்றம் இல்லை எனினும், இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கேப்-அப் ஆகி வர்த்தகமாக தொடங்கியது.
தங்க ஆபரணம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் விலையானது கடந்த இரண்டு தினங்களாகவே ஏற்றம் வருகின்றது. இன்று கிராமுக்கு 3,974 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,792 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்தியாவில் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், தேவையும் குறைந்து வரும் நிலையில், விலையில் பெரியதொரு மாற்றமும் இல்லை.
வெள்ளி ஆபரண விலை
சென்னையில் ஆபரண வெள்ளி விலையானது கிராமுக்கு 40.17 ரூபாயாகவும், கிலோவுக்கு 40,170 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாகவே வெள்ளி விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் கிலோவுக்கு 230 ரூபாய் அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!



Click it and Unblock the Notifications