இரண்டாவது நாளாகவும் தங்கம் கொடுத்த சர்பிரைஸ்.. வரலாற்று உச்சத்திற்கு பிறகு இரண்டாவது வீழ்ச்சி..!

உலக முதலீட்டாளர்களின் பாதுகாப்பு புகலிடமாக திகழும் தங்கம் விலையானது, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாறு காணாத புது உச்சத்தினை தொட்டது.

இது சாமனியர்களின் தங்கம் வாங்கும் கனவை நனவாக்குமா? என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. ஏனெனில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் உச்சம் தொட்டு வரும் நிலையில், பொருளாதாரம் என்ன ஆகுமோ? என்ற பதற்றமும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

வலாற்று உச்சம் தொட காரணம்

வலாற்று உச்சம் தொட காரணம்

ஆனால் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம், தற்போது மீண்டும் மீள்ச்சி காண ஆரம்பித்துள்ள நிலையில், அதனை முடக்கும் விதமாக அதிகரித்து வருகிறது. அதிலும் சில நாடுகளில் தற்போது இரண்டாவது கட்டமாக கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ளதோ என்ற பயத்தினை உருவாக்கியுள்ளது. இது தங்கத்தின் விலையை மீண்டும் உச்சம் தொட காரணமாக அமைந்தது.

எதற்காக சரிகிறது?

எதற்காக சரிகிறது?

அதோடு விலை உயர்ந்த ஆபரணங்களானது, பணவீக்கத்திற்கு எதிராக ஹெட்ஜ் செய்யப்படும் ஆபரணமாக உள்ளதால், இது தொடர்ந்து அதிகரித்து வர காரணமாக அமைந்துள்ளது. எனினும் வரலாற்று உச்சத்திற்கு பின்பு, இரண்டாவது நாளாக சரியும் தங்கம் விலையானது எதனால் சரிகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வட்டி குறைக்கப்படுமா?

வட்டி குறைக்கப்படுமா?

எனினும் சரிந்து வரும் பொருளாதாரத்தினை ஊக்கப்படுத்த மத்திய வங்கிகள் மேலும் வட்டி குறைப்பினை செய்யலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியிலும், நிபுணர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி இது போல வட்டி குறைக்கப்பட்டால், பொருளாதாரம் வளர்ச்சி காண வழிவகுக்கும். சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது 16% ஏற்றம் கண்டுள்ளது.

அதிகரித்து வரும் தேவை

அதிகரித்து வரும் தேவை

மேலும் தற்போது தங்கத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கம் விலையானது அதிகரிக்க இது காரணமாக அமைந்துள்ளது. இது வரும் வாரங்களிலும் அதிகரிக்க காரணமாக அமையலாம். இந்த நிலையில் புதன் கிழமையன்று தங்கம் இருப்பு வைத்துள்ள SPDR Gold Trust holdings, உலகின் மிகப்பெரிய இடிஎஃப் 0.65% அதிகரித்து, 1,176.85 டன்னாக அதிகரித்துள்ளது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக தங்கம் விலையானது சற்று வீழ்ச்சி கண்டு வருகிறது. இது அவுன்ஸூக்கு 1.55 டாலர்கள் குறைந்து, 1773.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது 1764.30 டாலர்களை உடைத்துக் கொண்டு கீழே செல்லும் பட்சத்தில் சற்று குறையவும் வாய்ப்புள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக சரிந்து வருகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 66 ரூபாய் குறைந்து, 48,068 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 0.13% வீழ்ச்சியாகும்.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

தங்கம் விலையினைப் போலவே, சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தற்போது 0.048 டாலர்கள் குறைந்து 17.622 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 0.27 சதவீதம் வீழ்ச்சி கண்டு வருகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 161 ரூபாய் குறைந்து, 47,625 ரூபாயாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 0.33 சதவீதம் சரிவாகும்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் இன்று இன்னும் மாற்றம் காணவில்லை. இதே கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலையானது குறைந்து வந்தாலும், ஆபரண தங்கத்தின் விலை குறையவில்லை. கடந்த வியாழக்கிழமையன்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து கிராமுக்கு 4635 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இது சவரனுக்கு 37,080 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் தற்போது வரை மாற்றம் காணவில்லை. கடந்த புதன் கிழமையன்று கிராமுக்கு 48.45 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 48,450 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+