தங்கம் இந்தியர்களின் உணர்வில் கலந்துள்ள உள்ள ஒரு உலோகமாகும். சொல்லப்போனால் தங்கத்தினை பிடிக்காத பெண்கள் இருப்பது மிக கஷ்டம். அந்தளவுக்கு தங்கத்தின் மீது அலாதி பிரியம்.
குருவி போல் சிறுக சிறுக காசு சேர்த்து, நகை வாங்கும் பெண்களும் இன்றைய நாளில் உண்டு. இப்படி கொஞ்சமாக சேர்த்து வருபவர்களுக்கு, செக் வைப்பது போல, தங்கம் விலையானது கடந்த ஆண்டிலிருந்தே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.
அதிலும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றன. அதோடு ஏற்றம் காணும் போது மிக அதிகளவில் இருந்தாலும், இறக்கத்தில் அந்தளவுக்கு வேகம் இல்லை.
மீண்டும் ஏற்றத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 48,400க்கு மேல் வர்த்தகம்.. ஜாக்பாட் தான்..!

முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு
கடந்த மூன்று தினங்களாக தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிந்து காணப்பட்டாலும், நடப்பு வாரத்தின் உச்சத்தினையும் உடைக்கவில்லை. குறைந்தபட்ச விலையையும் உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலை சற்று குறைந்து வருவது ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம்.

இன்று என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்?
தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் குறைந்து வரும் நிலையில், இன்னும் எவ்வளவு குறையும், இனி எப்படி இருக்கும்? விலை குறையுமா? எவ்வளவு குறையும்? சர்வதேச காமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன. இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம் வாருங்கள்.

Comex தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்றோடு கடந்த மூன்று தினங்களாக சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்னும் நல்ல சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 4.70 டாலர்கள் குறைந்து, 1909.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று அதிகமாகவே தொடங்கியுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பார்ம் ஆகியுள்ளது. இதனால் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

Comex வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது 0.59% குறைந்து, 27.100 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வில் 27.261 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.300 டாலர்களாக தொடங்கியுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பார்ம் ஆகியுள்ளது கவனிக்கதக்கது.

MCX தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் சற்று சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 227 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 50,678 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 50,904 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 50,755 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. இன்று கிலோவுக்கு 435 ரூபாய் குறைந்து, 69,527 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று குறைவாகத் தான் தொடங்கியுள்ளது.

பட்டையை கிளப்பிய பங்கு சந்தைகள்
சர்வதேச பங்கு சந்தைகள் பல வித சாதகமான காரணங்களினால் புதிய உச்சத்தினை எட்டி வருகின்றன. இது அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், ஏற்றம் கண்டு வருகின்றன. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான சாதகமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. அதோடு மீண்டுமொரு ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் Vs பத்திர லாபம்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு அழுத்தத்தில் உள்ள நிலையில், அமெரிக்காவின் 10 ஆண்டு பத்திரங்களின் லாபமும் 1% மேல் அத்கரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வருகின்றது. அதோடு கூடுதல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டால், அது டாலரின் மதிப்பினை மேற்கொண்டு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம் மீண்டு வரலாம்
அமெரிக்காவின் 10 வருட பத்திரங்களின் லாபமானது அதிகரித்துள்ளது, பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கமானது, பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மிகப்பெரிய அளவில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டால், அதனால் டாலரின் மதிப்பு வலுவடையும். ஆக இது சந்தைக்கு சாதகமாக அமையும். பணவீக்கமும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய ஒரு காரணமாக அமையலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

ஜோ பிடன் அடுத்த ஜனாதிபதி
பல பிரச்சனைகளுக்கும் மத்தியில் ஒரு வழியாக ஜோ பிடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா. ஜோ பிடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த கலவரத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியானது. எப்படியெனினும் இவை அனைத்தும் பிடனுக்கு சாதமாகவே அமைந்துள்ளது. இது பிடனின் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆக இது இனி அடுத்து வரும் திட்டங்களை எளிதாக அமல்படுத்த வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து
புதிய வகை கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையிலும், தடுப்பூசி பற்றிய சாதகமான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இனி இன்னும் பல முன்னணி நாடுகளும் விரைவில் ஒப்புதல் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதனை தடுக்க முடியும். மொத்தத்தில் பொருளாதாரம் மேற்கொண்டு சரிவதனை தடுக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?
அமெரிக்கா டாலரின் மதிப்பு, டெக்னிக்கலாக தினசரி கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சற்று சரியும் விதமாக காணப்படுவதால், தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புகள் அதிகம். இதனால் மீடியம் வர்த்தகர்கள் இன்னும் தங்கம் விலை குறையும் போது வாங்கலாம். நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம்.

தங்கம் ரெசிஸ்டன்ஸ் & சப்போர்ட் லெவல்கள்
இண்ட்ராடே லெவல்கள் - PP - 50870
ரெசிஸ்டன்ஸ் - ரூ.51,080, 51,256, 51,646
சப்போர்ட் - ரூ.50,694, 50484, 50,098
வார அப்டேட் - PP - 50224
ரெசிஸ்டன்ஸ் - ரூ.50,591, 50,947, 51,670
சப்போர்ட் - ரூ.49,868, 49,501, 48,778

வெள்ளி ரெசிஸ்டன்ஸ் & சப்போர்ட் லெவல்கள்
இண்ட்ராடே லெவல்கள் - PP - 69,886
ரெசிஸ்டன்ஸ் - ரூ.70,367, 70,772, 71,658
சப்போர்ட் - ரூ.69,481, 69,000, 68,114
வார அப்டேட் - PP - 68,540
ரெசிஸ்டன்ஸ் - ரூ.69,380 70,640, 72,740
சப்போர்ட் - ரூ.67,280, 66,440, 64,340