3மாத உயர்விலிருந்து சரிந்த தங்கம்.. தொடர்ந்து 3 நாளாக குறையும் வெள்ளி.. இப்போது தங்கம் வாங்கலாமா..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் மருத்துவச் செலவுகளுக்காகவும், உணவுகளுக்காகவும் வங்கியில் இருக்கும் பணத்தைக் கூடக் கையிலேயே வைத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.

ஆனால் முதலீட்டுச் சந்தையில் நீண்ட காலம் மற்றும் குறுகிய கால முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலும், கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளையில் அடுத்த 12 முதல் 18 மாத இடைவேளையில் தங்கம் விலை மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தை அடையும் எனக் கணிப்பு நிலவும் காரணத்தால் நீண்ட கால முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

 தங்கத்திற்கான டிமாண்ட்

தங்கத்திற்கான டிமாண்ட்

இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்போதுமே குறைவது இல்லை, கொரோனா தொற்று நாடு முழுவதும் மக்களைப் பாதித்துள்ள இந்தச் சூழ்நிலையிலும் அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சிறப்பாக இருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 டிஜிட்டல் கோல்டு விற்பனை

டிஜிட்டல் கோல்டு விற்பனை

லாக்டவுன் காரணமாக நகைக்கடைகள் மூடியிருக்கும் நிலையில் மக்கள் பலரும் ஆன்லைன் தளத்தில் தங்கத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில் தற்போது தொடர்ந்து 3 நாளாகக் குறைந்து வருகிறது.

 சர்வதேச சந்தையின் தாக்கம்

சர்வதேச சந்தையின் தாக்கம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலக நாடுகளில் கொரோனாவுக்குப் பின் உருவாகியுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி காரணமாக முதலீட்டாளர்கள் அதிக லாபம் பெறுவதற்காகப் பங்குச்சந்தையிலும் பத்திர சந்தையிலும் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

 தங்கம் மீதான முதலீடு

தங்கம் மீதான முதலீடு

இதனால் தங்கம் மீதான முதலீடு அளவுகள் சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது கொரோனா தொற்றுக் காரணமாகப் பங்குச்சந்தை தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும காரணத்தால் இந்திய முதலீட்டாளர்கள் கணிசமான முதலீட்டைத் தங்கத்தின் பக்கம் திருப்பும் காரணத்தால் இதன் விலை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

 MCX சந்தை வர்த்தகம்

MCX சந்தை வர்த்தகம்

இந்நிலையில் இன்றைய MCX சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.32 சதவீதம் வரையில் சரிந்து 48,520 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.33 சதவீதம் சரிந்து 72,133 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,863.45 டாலரில் இருந்து 1,877.40 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் மாலை வர்த்தகத்தில் கடந்த 3 நாட்களாக அதிகளவிலான சரிவுகளை எதிர்கொண்டு வருகிறது தங்கம். நேற்றை மாலை வர்த்தகத்தில் தங்கம் விலை 1,850 டாலர் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+