ரூ.9,300 மேலாக சரிவில் தங்கம் விலை.. இது ரொம்ப நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே காலை அமர்வில் சற்று சரிவினை கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையானது சற்றே சரிவில் காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. எனினும் இது மேற்கொண்டு விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

 பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக உயர்வு.. மும்பையில் 110ஐ நெருங்கியது..! பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக உயர்வு.. மும்பையில் 110ஐ நெருங்கியது..!

இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்ற நிலையில், இந்திய சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று வலுவான நிலையிலேயே காணப்படுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

தங்கத்தின் விலையை ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

பத்திர சந்தை

பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தில் காணப்படுகிறது. இது ஒரு வருட உச்சத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்தான் தங்கம் விலையானது பெரிய அளவில் ஏற்றம் காணாமல் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது.

முதலீட்டாளர்கள் கவனம்
 

முதலீட்டாளர்கள் கவனம்

எனினும் அமெரிக்காவின் பே ரோல் குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் அதனை கவனித்து கொண்டுள்ளனர். இது டாலரின் மதிப்பில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றம் காணலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. எப்படி இருப்பினும் தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர சந்தையானது, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடு குறைக்க வழி வகுத்துள்ளது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரின் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட பல காரணிகளும் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கும் என்ற நிலையில், இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த தேர்வாக இருக்கும் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

இந்த நிலையில் 46,800 என்ற லெவலில் தங்கத்தினை வாங்கலாம் என்றும், 47,300 ரூபாயாக கணித்துள்ளனர். இதே 46,600 ரூபாய் என்ற லெவலை உடைத்தால் தங்கம் விலை குறையலாம். இது செல்லிங் லெவலுக்கு மாறலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது. அப்படி சரியும் பட்சத்தில் 46,300 டார்கெட் ஆக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கவலையளிக்கும் திரவத் தங்கம் விலை

கவலையளிக்கும் திரவத் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அளவு அதிகரித்து வரும் நிலையில், இது இதுவும் பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையை ஊக்குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

தங்கத்தின் தேவையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கும் நிலையில், இது தங்கம் விலையை நீண்டகால நோக்கில் ஊக்குவிக்க வழிவகுக்கலாம். மேலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்ததாகவும் இருக்கும் நிலையில், இது முதலீட்டு ரீதியாகவும் தங்கத்திற்கான தேவை என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவினை கண்டுள்ளது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.50 டாலர்கள் குறைந்து, 1759.35 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.573 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 49 ரூபாய் குறைந்து, 46,858 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 46,907 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 46,851 ரூபாயாகவும் தொடங்கியது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்க வில்லை. ஆக இது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது, சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 107 ரூபாய் அதிகரித்து, 61,110 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 61,003 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 61,054 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சம் விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 4,411 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 35,288 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, 4,812 ரூபாயாகவும், சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 38,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 48,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 65.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 652 ரூபாயாகவும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 65,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் மற்றும் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் & இன்ட்ராடே வர்த்தகர்கர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today fall in morning session: will gold rate decrease in today?

Gold prices latest updates.. Gold prices fall over Rs.9,300 from august month high, is it right to buy gold.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X