தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 10 கிராமுக்கு ரூ.1470.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..!

லாக்டவுனால் இங்கு உலகமே முடங்கி கிடக்க தங்கம் விலை பரபரவென கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதனால் சர்வதேச சந்தையிலும் சரி, இந்திய ப்யூச்சர் சந்தையிலும் சரி சத்தமேயில்லாமல் முதலீட்டாளார்கள் நல்ல லாபத்தினை பார்த்து கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக சந்தையின் வார இறுதியான இன்றும், புராபிட் புக்கிங் செய்துள்ளமையால் தங்கம் விலை குறைந்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இது மட்டும் காரணம் அல்ல, சீனாவின் ஜிடிபி விகிதம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அது எதிர்பார்த்ததைவிட சற்று நன்றாகவே வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பெருத்த அடி வாங்கலாம்

பெருத்த அடி வாங்கலாம்

முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய இந்த வைரஸ் முதலில் வயதில் முதியவர்களை அதிகம் தாக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வயது பாகுபாடின்றி பிறந்த குழந்தை முதல், 100 வயது தாத்தா வரை தாக்கி வருகின்றது. ஆக இப்படி இதன் தாக்கம் சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில், இதனால் சீனாவின் பொருளாதாரம் பெருத்த அடி வாங்கலாம்.

இனியும் வீழ்ச்சி தான்

இனியும் வீழ்ச்சி தான்

மேற்கொண்டு உலகளாவிய தேவை காரணமாக மீண்டும் சீனா வீழ்ச்சியினை காணலாம் என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் நான் சீனாடா? இது எங்கள் ஜிடிபி என கெத்து காட்டியுள்ளது போல் ஜிடிபி விகிதம் வந்துள்ளது. ஜிடிபி 6.8% குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், அது எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்பது மிக நல்ல விஷயமாக கருதப்படுவதாகவும் சீனா ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

இது எல்லாவற்றையும் விட தற்போது சீனா பொருளாரத்தினை மீட்க பல்வேறு விதமான பொருளாதார மீட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு எப்படி எனில் எப்படியேனும் எங்களது பொருளாதாரத்தினை மீட்டு தீருவேன் என டிரம்ப் ஒரு புறம் 200 சிறந்த தொழில் வல்லுனர்களை தனது பொருளாதார மீட்புகுழு ஆய்வில் சேர்த்துள்ளராம். ஏனெனில் அவர்கள் நம்மை விட அறிவாளிகள். அவர்களுக்கு பொருளாதாரத்தினை மீட்க நல்ல விஷயங்களை பகிரக்கூடும் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறாராம்.

தங்க பத்திரம் விற்பனை

தங்க பத்திரம் விற்பனை

அதோடு, இந்தியா அரசு தங்க பத்திர விற்பனை ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மறுபுறம் தொடர்ந்து பிசிகல் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து லாக்டவுன் காரணமாக குறைந்து வருகிறது. அதோடு உலகளாவிய லாக்டவுன் காரணமாக உலகளவில் பிசிகல் தங்கத்தின் தேவையானது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் இறுதியில் சற்று வீழ்ச்சியுடனே முடிவடைந்துள்ளது. அதிலும் இன்றோடு மூன்றாவது நாளாக சரியும் சர்வதேச தங்கத்தின் விலையானது தற்போது அவுன்ஸுக்கு 28.70 டாலர் குறைந்து 1,702.85 டாலர்களாக வர்த்தகமாகி வருக்கிறது. இது கிட்டதட்ட 1.63% வீழ்ச்சி கண்டுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

கடந்த எட்டு சந்தை தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, இன்று ஒரே நாளில் தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 1,470 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கிட்டதட்ட 3.11% வீழ்ச்சியாகும். இன்னும் கொஞ்சம் போனால் லோ பீரிஷ் விலைக்கு சென்று விடும் போல். கடந்த வாரம் முழுக்க ஏற்றம் கண்டு வந்தாலும், அதன் தாக்கம் இன்று ஒரே நாளில் இவ்வளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது ஒரு நாள் ஏற்றம் கண்டாலும், அடுத்த நாள் சற்று இறக்கம் கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தற்போது வரையில் 1.97% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 0.292 டாலர் குறைந்து 15.330 டாலராக வர்த்தகமாகி வருகிறது.சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில தினங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தான் வர்த்தகம் ஆகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 1351 ரூபாய் குறைந்து 42,904 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 2.97% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்சிஎக்ஸ் வெள்ளி விலையினை பொறுத்த வரை வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் கடந்த சில தினங்களாக வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று கிட்டதட்ட 3% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னை ஆபரண தங்கத்தினை பொறுத்த வரையில் கடந்த 7 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 4,060 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 32,480 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. லாக்டவுன் சமயத்தில் இவ்வாறு குறைந்திருந்தாலும், மக்கள் வாங்க முடியாத நிலையே நிலவி வருகிறது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் குறையாவிட்டாலும் கிராமுக்கு 41.20 ரூபாயாகவும், இதே 1 கிலோவுக்கு 41,200 ரூபாயாக சுமார் 690 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த ஏழு தினங்களில் இடையில் ஒரே நாள் நட்டுமே சற்று குறைக்கப்பட்டது. ஆனால் இன்று தான் அதிகபட்சமாக கிலோவுக்கு 690 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+