கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வருடத்தின் கடைசி நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கும் விதமாக சரிந்து வருகிறது.
நிபுணர்கள் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று கூறி வரும் நிலையில், குறைந்தால் வாங்கலாம் என்று பலரும் காத்துக் கொண்டுள்ளனர். அப்படியானவர்களுக்கு இது ஜாக்பாட் தான்.
ஏனெனில் குறைந்த விலையில் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு கிடைக்குமே. உண்மையில் இது வருட கடைசியில் கிடைத்த நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
சர்வதேச சந்தையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் என்ன விலை நிலவரம்? இனி விலை குறையுமா? இப்படியே கூடுமா? இப்போது வாங்கலாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமாக காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர், வாருங்கள் பார்க்கலாம்.
தங்கத்தில் புராபிட் புக்கிங்
கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ந்து தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. அவ்வப்போது சரிவினைக் கண்டு வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கடந்த மூன்று வாரங்களாக ஏற்றத்தில் தான் உள்ளது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதனால், இந்த சரிவு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளாகவே, தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4 டாலர் குறைந்து, 1891 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வில் 1893.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலும் 1899.45 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது. ஆக இதனால் தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று ஏமாற்றமளிக்கும் விதமாக ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது தற்போது சற்று அதிகரித்து 26.600 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த அமர்வில் 26.573 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 26.825 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும், தங்கம் விலையானது இன்று சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம்
விலையானது 45 ரூபாய் குறைந்து, 50,090 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையினை பொறுத்த வரையில் நேற்று 50,135 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,059 ரூபாயாக தொடங்கியுள்ளது.
உச்சத்தில் இருந்து விலை குறைவு தான்
நிபுணர்கள் சொல்வதனை போல் தங்கம் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தினை தொட்ட நிலையில், இன்றைய விலையுடன் ஒப்பிடும்போதும் 6000 ரூபாய்க்கு மேல் குறைவாகத் தான் உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகத் தான் பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 93 ரூபாய் குறைந்து, 68,521 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வில் வெள்ளி விலையானது முடிவில் 68,614 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 68,452 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளி விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
டாலர் மதிப்பு குறைவு
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு சற்று சரிவடைந்த நிலையில், சர்வதேச சந்தையில் இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே இந்திய சந்தையில் சற்று சரிவினைக் கண்டு வருகிறது. இது ரூபாயின் எதிரொலி மற்றும் புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் நிலவரம்
நடப்பு ஆண்டில் விலையுயர்ந்த ஆபரணமான தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 24% ஏற்றம் கண்டுள்ளது. இது 10 ஆண்டுகளில் மிகப்பெரிய ஏற்றமாகும். இதே இந்திய சந்தையில் ரூபாயின் சரிவின் காரணமாக தங்கம் விலையானது 27% ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிலும் இந்த நிலை தொடரலாம் என்றும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு
அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, 900 பில்லியன் டாலர் ஊக்கத் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்ப்பாக்கப்படுகிறது. அதே நேரம் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், பொருளாதாரத்தினை மீண்டும் சரிவு பாதைக்கு இழுத்து செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு டாலரில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் தங்களது முதலீடுகளை அதிகரிக்கலாம்.
தங்கம் விலை எதிர்பார்ப்பு?
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் உள்ளது. இதனால் தங்கம் விலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும். தங்கம் விலைக்கு சாதகமாக கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், அது சர்வதேச அளவில் நிலவி நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய வகை கொரோனாவுக்கு இந்த தடுப்பூசிகள் சாதகமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தங்கத்திற்கு சாதகமான காரணிகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், அமெரிக்க சீன பிரச்சனை, குறைவான வட்டி விகிதம் என பலவும் தங்கத்தின் விலைக்கு சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பரவி வரும் புதிய வகை கொரோனா காரணமாக, கட்டுபாடுகள் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரவிருக்கும் பண்டிகை காலங்களில், இந்தியா மற்றும் சீனாவில் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இனி என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலை உச்சத்தில் இருப்பதால் சற்று குறையும் போது வாங்கலாம். வருடத்தின் கடைசி நாளாக இன்று உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்ய நினைக்கலாம். இதனால் சந்தை சற்று சரிந்து மீண்டும் ஏற்றம் காணலாம். ஆக குறைந்த விலைக்கு வரும் போது தங்கத்தினை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications