அமெரிக்காவின் பணவீக்க விகித தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், தங்கம் விலையானது 3 மாத சரிவில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கையானது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிண்றனர்.
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது இன்று மாலை வெளியாகவிருக்கும் நிலையில் , அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும்.
ஏன் இந்த சரிவு?
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு பின்னர் அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவாகவே இருந்து வருகின்றது. பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் ஆர்வத்தினை குறைத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
விலை அதிகரிக்கலாம்
கடந்த வாரம் அமெரிக்காவின் மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டியினை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
எனினும் சர்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு புகலிடம்
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என பல பிரச்சனைகளுக்கு மத்தியில், பாதுகாப்பு புகலிடமான தங்கமானது ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.
3 மாத சரிவில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 3 மாத சரிவில் காணப்படுகின்றது. ஸ்பாட் கோல்டின் விலை அவுன்ஸூக்கு 1832.06 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது அமெரிக்க டாலரின் மதிப்பானது 20 வருட உச்சத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. வலுவான டாலரின் மதிப்பு மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது.
இன்று எப்படியிருக்கும்?
மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அமெரிக்க டாலர், பத்திர சந்தை ஏற்றத்தினால் சற்று சரிவில் காணப்படுகிறது. இன்னும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் இன்று மாலை வெளியாகவிருக்கும் டேட்டாவினை பொறுத்து தங்கம் விலை இருக்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 4787 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து, 38,296 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது கிராமுக்கு 64 ரூபாய் குறைந்து, 5222 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 512 ரூபாய் குறைந்து, 42,240 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இதுவரையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து, 64.80 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 648 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து, 64,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?



Click it and Unblock the Notifications