டெல்லி: அந்த காலம் முதல் இன்று வரை தங்கம் என்றாலே ஒரு பாதுகாப்பான கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது.
அது இந்தியாவானாலும் சரி, மற்ற உலக நாடுகளானாலும் சரி, தங்கம் முதலீடு என்பது ஒரு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.
அதிலும் இந்தியாவினைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய முதலீடு என்பதை விட, மக்கள் மத்தியில் விரும்பி அணியப்படும் உலோகமாக தங்கம் இருந்து வருகிறது.
முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்
சரி இன்று விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் பொருளாதாரம் இன்னும் என்னவாகுமோ? என்ற கவலையிலேயே கவனித்து வருகின்றனர். இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் ஆராய்ச்சி நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
தரக்குறீயீடு குறைப்பு
அதிலும் இந்தியாவில் தரக்குறியீட்டினை கடந்த நவம்பர் 2018ல் Baa2 மாறியமைத்த நிலையில், தற்போது Baa3 ஆக குறைத்துள்ளது. அதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியினை கண்டு வருவதாகவும் மதிப்பிட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு
மேலும் தற்போது உலகளவில் பல்வேறு நாடுகள் லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்ற நிலையில், தங்கத்தில் சற்று முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று குறையலாம் என்ற எண்ணமே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.25 டாலர்கள் குறைந்து, 1,748.95 டாலராக வர்த்தகமாகி வருகிறது. அதாவது 0.07% (11.15 மணியளவில்) குறைந்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாள் சரிவாகும். எனினும் சர்வதேச நிலவி வரும் சாதகமான சூழ்நிலைகளினால் தங்கம் விலை சற்று குறையலாம் என்றாலும், நீண்ட கால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ஆகஸ்ட் மாத காண்ட்டிராக்டில் விலை 10 கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 47,160 ரூபாயாக சற்று அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு சந்தை தினங்களாகவே தங்கம் விலையானது சற்று அதிகரித்து இருந்த நிலையில், இன்றும் சற்று அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது 0.089 டாலர் குறைந்து, 18.738 டாலராக குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இது 0.45% வீழ்ச்சியாகும். இது கடந்த ஐந்து தினங்களுக்கு பிறகு, இன்று சற்று குறைந்து வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்று பெரியளவில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை எனலாம்.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் காணப்படுகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 164 ரூபாய் குறைந்து 50,450 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.32% வீழ்ச்சியாகும். எம்சிஎக்ஸ் சந்தையில் நான்கு நாள் ஏற்றத்துக்கு பிறகு காணும் முதல் சரிவாகும்.
அனுமதி இல்லை
நாட்டின் பணவீக்க உயர்விக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில், நிலவி வரும் மந்த நிலையின் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்து வருகின்றது. அதிலும் இந்தியாவின் பல பகுதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக நகைக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஏசி கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தங்கம் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது.
சென்னை ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று கிராமுக்கு 4,513 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 36,104 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த 5 தினங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஐந்து நாட்களில் மட்டும் சவரனுக்கு 656 ரூபாய் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை
சர்வதேச சந்தையினை பொறுத்தே இந்தியாவில் வெள்ளியின் விலையானது நிர்ணயிக்கப்படும் நிலையில், அங்கு விலை சற்று குறைந்து இருந்தாலும், ஆபரண சந்தையில் வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 50.16 ரூபாயாகவும், கிலோ வெள்ளியின் விலையானது 50,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications