டெல்லி: தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது வாரத்தின் முதல் நாளான இன்று சற்று அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரமே.
ஆக முதலீட்டாளார்கள் மத்தியில் வீழ்ச்சி கண்டு பொருளாதாரத்தினால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடையும் என்ற உணர்வே நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனை இன்னும் வேகமெடுக்கும் வகையில் கொரோனாவின் தாக்கமும் இன்னும் அதிகரித்து வருகிறது. இது எந்தளவுக்கு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற எண்ணமும் நிலவி வருகிறது.
கொரோனா பாதிப்பு
அதிலும் தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 2.5 லட்சத்தினை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் கிட்டதட்ட 7000 நெருங்கியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் 70 லட்சத்தினை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 4 லட்சத்தினை தாண்டியுள்ளது. இதனால் விலை உயர்ந்த உலோகத்தின் விலையானது சற்று நிலையானதாகவே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுக்க சற்று சரிவினைக் கண்டு வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. தற்போது தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 9.50 டாலர்கள் குறைந்து, 1692.65 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இது 0.58% ஏற்றமாகும்.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச தங்கத்தின் விலையின் எதிரொலியாக, எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 174 ரூபாய் அதிகரித்து 45,880 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியான சரிவுக்கு பின்பு விலை இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் தங்கம் விலையானது இன்று அதிகரித்து இருந்தாலும் 46,000 ரூபாய்க்கு கீழாகத் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது, 2.02 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. தற்போது விலை 0.356 டாலர் அதிகரித்து 17.832 டாலர்களாக அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த ஒரு வார சரிவுக்கு பிறகு, முதல் நாளாக இன்று ஏற்றம் கண்டு வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் வெள்ளியின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது 701 ரூபாய் அதிகரித்து, 48052 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று கிராம் தங்கத்தின் விலை 4,435 ரூபாயாகவும், இதே சவரன் தங்கத்தின் விலையானது 35,480 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே வெள்ளியின் விலையானது கிராமுக்கு 52.90 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளியின் விலையானது 52,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக விலை இன்னும் நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!



Click it and Unblock the Notifications