Gold prices today:தங்கம் விலையானது இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இரண்டாவது நாளாக சரிவில் காணப்படுகிறது. தொடர்ந்து மத்திய வங்கிகளானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்ந்து 1900 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. அமெரிக்காவின் வேலையின்மை தரவு, அமெரிக்காவின் பத்திர சந்தை என பலவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அடுத்த வாரம் அமெரிக்காவின் சிபிஐ தரவானது வெளியாகவுள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
தொடர்ந்து சீனாவில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். டாலரின் மதிப்பில் பலவீனம் மற்றும் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு இருந்தபோதிலும், விலைமதிப்பற்ற உலோகங்கள் ஆதரவைப் பெறலாம். மொத்தத்தில் தங்கம் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11.55 டாலர்கள் குறைந்து, 1867.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை போல வெள்ளி விலையும் அவுன்ஸூக்கு, குறைந்து காணப்படுகின்றது. தற்போது 1.16% குறைந்து, 21.880 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 282 ரூபாய் குறைந்து, 56,566 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 679 ரூபாய் குறைந்து, 66,351 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, 5320 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, 42,560 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 5804 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து, 58,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது இரண்டாவது நாளாக இன்று குறைந்து காணப்படுகின்றது. இது இன்றும் கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 72,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications