இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன.. குறைந்திருக்கா.. இன்று வாங்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிடித்தமான ஒரு ஆபரணம் என்றால் அது தங்கம் தான்.

அது பிறந்த குழந்தை முதல் வயதான தாத்தா பாட்டிமார்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உலோகம். இது இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, உணர்வுகள் என பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள, அனைத்து சம்பிரதாய சடங்குகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இது வாங்க சரியான தருணம் தான்.. சென்செக்ஸ் 52,700 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,800-க்கு அருகில்..! இது வாங்க சரியான தருணம் தான்.. சென்செக்ஸ் 52,700 கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 15,800-க்கு அருகில்..!

இப்படி இந்திய மக்களின் உணர்வுகளில் கலந்துள்ள தங்கத்தினை வேண்டாம் என்று கூறும் நபர் இருப்பது அரிதே. கொரோனாவின் வருகைக்கு பின்னர், இந்த தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து $1800 மேல் தங்கம் விலை

தொடர்ந்து $1800 மேல் தங்கம் விலை

தங்கம் விலையானது தொடர்ந்து நிபுணர்கள் கூறி வருவதை போலவே 1800 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இன்றைய நிலவரம் என்ன? வாங்கலாமா? வேண்டாமா? இன்னும் குறையுமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கருத்து என்ன? முக்கிய லெவல்கள் என்ன? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

ஏற்றத்தில் தங்கம் விலை

ஏற்றத்தில் தங்கம் விலை

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது காலை அமர்வில் விலையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இன்று காலை அமர்விலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஆக நிபுணர்கள் கூறுவதை போலவே தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதா? குறையவே குறையாதா? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை
 

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 3.70 டாலர்கள் அதிகரித்து, 1813.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாக இன்று தொடங்கியிருந்தாலும், தற்போது வரையில் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. ஆக நேற்றைய உச்சமான 1818 டாலர்களை உடைத்தால் இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை ஏற்றத்தில் காணப்படும் அதே நேரத்தில், வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.07% ஆதிகரித்து, 26.157 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சந்தை தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும். தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 68 ரூபாய் அதிகரித்து, 47,9574 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 58 ரூபாய் அதிகரித்து, 69,139 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து, 4,321 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 36,248 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 11 ரூபாய் அதிகரித்து, 4,943 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 39,544 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 50 பைசா குறைந்து, 73.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, 73,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் தங்கம் விலையானது, இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.

மற்ற நகரங்களில் தங்கம் விலை நிலவரம் என்ன?

மற்ற நகரங்களில் தங்கம் விலை நிலவரம் என்ன?

டெல்லியில் சவரன் தங்கம் ரூ.37,568

கொல்கத்தா சவரன் தங்கம் ரூ.37,848
பெங்களூர் சவரன் தங்கம் ரூ.35,920
கேரளாவில் சவரன் தங்கம் ரூ.35,920
மும்பையில் சவரன் தங்கம் ரூ.37,520
விசாகப்பட்டிணத்தில் சவரன் தங்கம் ரூ.35,920

உச்சம் தொட்ட பணவீக்கம்

உச்சம் தொட்ட பணவீக்கம்

நுகர்வோர் விலை குறியீடு குறித்தான டேட்டாவானது ஏதிர்பார்ப்பினை விட ஏற்றத்தில் வந்ததையடுத்து, தங்கம் விலையானது முந்தைய அமர்வில் காலை சற்று குறைந்திருந்தாலும், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது. அதோடு அமெரிக்க பத்திர சந்தை மற்றும் டாலர் குறியீடுகள் ஏற்றத்திற்கு திரும்பியிருந்தாலும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது தங்கத்தின் விலையானது ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் அச்சம்

முதலீட்டாளர்கள் அச்சம்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது குறித்து பலவிதமாக கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

இந்த வாரத்தில் என்ன செய்யலாம்?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம் பல காரணிகளும் தங்கம் விலை அதிகரிக்க ஏதுவான காரணிகளாகவே உள்ளன. ஆக நீண்டகால நோக்கில் வாங்குபவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today in Chennai, Kerala, Karnataka, Delhi on July 14, 2021; check MCX and Comex rates

Gold price latest update.. Gold prices today in Chennai, Kerala, Karnataka, Delhi on July 14, 2021; check MCX and Comex rates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X