சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பு.. 8 மாத சரிவில் தங்கம் விலை.. உச்சத்தில் இருந்து ரூ.10,000 வீழ்ச்சி!

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே தினசரி கேண்டில் பேட்டர்னில் காணப்படுகிறது. அதிலும் தங்கம் விலையானது 8 மாதமாக குறைந்த விலையில் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கத்தின் விலையானது கிட்டதட்ட 10,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது.

இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இது முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது.

இன்று வாங்கலாமா?

இன்று வாங்கலாமா?

எனினும் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தினை வாங்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் தினசரி கேண்டில் பேட்டர்னில், புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் இந்திய சந்தையினை பொறுத்தவரையில் உச்சத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் சரிவில் இருப்பதால், தங்கத்தினை வாங்க இது ஒரு சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது.

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் என்றாலே இன்றளவிலும் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக உள்ளது. இந்த நிலையில் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டும். அதோடு தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நிச்சயம் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.

நடப்பு ஆண்டு நிலவரம்

நடப்பு ஆண்டு நிலவரம்

கடந்த ஆண்டே தங்கம் விலையானது கிட்டதட்ட 25% ஏற்றம் கண்டு, மிகப்பெரிய லாபம் கொடுத்த முதலீடாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இது வரையில் தொடர்ச்சியாக 7% மேலாக தங்கம் விலையானது சரிந்து வருகிறது. இது 30 வருடத்தில் வருட தொடக்கத்தில் ஒரு மோசமான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்


கொரோவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு ஊக்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி பாதையினை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. ஆக இது அந்தந்த நாட்டின் நாணயங்களை ஊக்குவிக்கலாம். குறிப்பாக அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. எனினும் அதிகரிக்கும் பணவீக்கம் என்பது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது விலை சரிவினை தடுக்கலாம். தங்கம் விலையேற்றத்தினை தூண்டலாம்.

உச்சத்திலிருந்து ரூ.10,000 சரிவு

உச்சத்திலிருந்து ரூ.10,000 சரிவு

இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த ஆகஸ்ட் மாத உச்ச விலையில் இருந்து பார்க்கும்போது, தங்கம் விலையானது கிட்டதட்ட 10,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம். இது தங்கம் விலையை மேலும் ஆதரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 10.25 டாலர்கள் அதிகரித்து, 1787.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது தற்போது 1.23% அதிகரித்து, 27.582 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலை சற்று ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றத்தில் உள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 108 ரூபாய் அதிகரித்து, 46,305 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 405 ரூபாய் அதிகரித்து, 69,417 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. ஆக இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

Array

Array

இந்திய சந்தையில் தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விலை 46,000 - 45,770 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 46,480 - 46,620 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதே வெள்ளியின் அடுத்த முக்கிய சப்போர்ட் விலை 68,200 - 67,500 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 69,900 - 70,700 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

டாலரின் என்ன சப்போர்ட் லெவல்கள்

டாலரின் என்ன சப்போர்ட் லெவல்கள்

இந்த வாரத்திலும் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்று கணித்துள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதம் 1770 - 1758 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் விகிதம் 1800 - 1810 டாலர்களாகும். தற்போது தங்கத்தின் விலையானது 1790.85 டாலர்களாக வர்த்தகமாகி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது இந்த வாரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தங்கதினை மீடியம் டெர்மில் வாங்குபவர்கள் கட்டாயம் வலுவான ஸ்டாப் லாஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும் நீண்டகால நோக்கியல் வாங்க இது சிறந்த இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+