கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்னும் ஏற்றம் காணுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று பலமான சரிவினைக் கண்ட தங்கத்தின் விலை, இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது சாத்தியமா? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும் என்று பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

தங்கம் விலையானது நேற்று பலமான சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. இது இப்படியே குறையுமா? அல்லது ஏற்றம் காணுமா? அடுத்தது என்ன செய்யலாம் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

சரி ஏன் இப்படி தொடர்ந்து உச்சம் கண்டு வருகிறது. என்ன காரணம்? இன்றைய விலை நிலவரம் என்ன?

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

முந்தைய அமர்வில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 14.55 டாலர்கள் அதிகரித்து, 1923.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வினை விட, இன்று சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலமான ஏற்றம் கண்டு வரும் நிலையில், வெள்ளி விலையும் சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. தற்போது 1.07% ஏற்றம் கண்டு, 27.337 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் நேற்றைய முடிவு விலையினை விட ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. எனினும் மார்னிங் ஸ்டார் பேட்டர்ன் சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 391 ரூபாய் அதிகரித்து, தற்போது 50,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.77% ஏற்றமாகும். நேற்றைய வர்த்தகத்தில் 50,509 ரூபாயாக முடிவடைந்து இருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,740 ரூபாயாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை


இதே இந்திய சந்தையில் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று ஏற்றத்துடனே காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 557 ரூபாய் அதிகரித்து, 69,974 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது இன்னும் மாற்றம் காணாத நிலையில், கடந்த புதன்கிழமையன்று கிராமுக்கு 4,886 ரூபாயாகவும், இதே சவரன் விலையானது 39,088 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதே தூய தங்கத்தின் விலையானது சவரனுக்கு 42,632 ரூபாயாக காணப்படுகிறது. இந்த புத்தாண்டு தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கம் விலையானது தொடர்ச்சியான ஏற்றம் கண்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்னும் மாற்றம் காணாத நிலையில், வெள்ளி விலையும் இன்னும் மாற்றம் காணவில்லை. நேற்று கிராமுக்கு 75.11 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 75,110 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டும் வந்துள்ளது. வெள்ளியின் விலையும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏழு நாட்களில் ஒரு நாள் மட்டுமே சற்று குறைந்த நிலையில், மற்ற ஆறு நாட்களுக்கும் விலை அதிகமாகவே இருந்துள்ளது.

கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு

அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பிரிட்டனில் புதிய வகை கொரோனாவின் தாக்கம் மிக மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதோடு மற்ற நாடுகளிலும் இது பரவக்கூடுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா அரசியல் பதற்றம்

அமெரிக்கா அரசியல் பதற்றம்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள, ஜோ பிடன் தேர்தலில் மோசடி செய்துள்ளதாக டிரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை நோக்கி படையெடுத்துள்ளனர். அங்கு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அமெரிக்காவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

ஊக்கத்தொகை எதிர்பார்ப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் போராட்ட களத்தின் மத்தியில், அங்கு ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வெளியாக தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு மீண்டும் அழுத்தத்தில் உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

தங்கம் லெவல்கள்

தங்கம் லெவல்கள்

தங்கம் விலையின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 50,250 - 50,000 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,800 - 51,000 ரூபாயாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 68,800 -, 68,400 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 70,200 - 71,100 ரூபாயாகும். நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்ஜிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், கொஞ்சம் காத்திருந்து வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.தங்கம் விலையின் முக்கிய சப்போர்ட் லெவல்கள் 50,250 - 50,000 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 50,800 - 51,000 ரூபாயாகும். இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவல் - 68,800 -, 68,400 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 70,200 - 71,100 ரூபாயாகும். நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்ஜிங் ஸ்டார் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், கொஞ்சம் காத்திருந்து வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today rise, a day after big falling

Gold prices updates.. Gold prices today rise, a day after big falling
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X