தங்கம் விலை ஏற்றம் தான்.. ஆனால் உச்சத்திலிருந்து ரூ.3,000 குறைவு தான்.. இன்று குறையுமா..வாங்கலாமா?

இன்றைய நாளில் தங்கம் விலையானது அதிகரித்தாலும், தங்கம் விலை குறையுமா? எப்போது குறையும்? எப்போது வாங்கலாம். இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதே இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் கூட, தற்போது குழப்பமடைந்துள்ளனர் எனலாம். ஏனெனில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறினாலும், ஏற்கனவே தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வருகிறது.

அவ்வப்போது சரிவினைக் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களது லாபத்தினை புக்கிங் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலையானது, அவ்வப்போது சரிவினைக் கண்டு வருகிறது.

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

எனினும் இன்றைய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று ஏற்றத்தினை கண்டு வருகிறது. முந்தைய சந்தை தினத்தில் தங்கம் விலையானது 0.18% அதிகரித்து 53,370 ரூபாயாகவும், இதே வெள்ளியில் விலையானது 0.8% அதிகரித்து, 69,688 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது அதிகரிக்க பல காரணங்கள் உள்ள நிலையில், தற்போது அமெரிக்கா டாலரின் மதிப்பு பலவீனமடைந்துள்ளது. இது தங்கம் விலை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் பதற்றம்

அதிகரித்து வரும் பதற்றம்

மற்ற நாணயங்களோடு ஒப்பிடும்போது, தங்கம் விலையானது சற்று குறைவானதாகவே காணப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் தங்கம் விலையினை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தற்போது அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்திற்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இது அமெரிக்கா சீனா இடையே பதற்றத்தினை அதிகரித்துள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் 16.5% ஜிடிபி சரிந்துள்ளது. இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது. தங்கம் விலையானது 0.33% அல்லது 175 ரூபாய் அதிகரித்து 53,450 ரூபாயாக அதிகரித்துள்ளது. வெள்ளி விலையானது 1.25% அல்லது கிலோவுக்கு 865 ரூபாய் அதிகரித்து 70,020 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே போல சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது வாரத் தொடக்கத்திலேயே ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தற்போது தங்கம் அவுன்ஸுக்கு 12.50 டாலர் அதிகரித்து, 2011.30 டாலர்களாக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 0.61% அதிகரித்துள்ளது. எனினும் திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது 1998.70 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலேயே 1992.70 டாலர்களாக தொடங்கியுள்ளது.எனினும் தற்போது தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் 1.50% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது 0.393 டாலர்கள் அதிகரித்து 28.050 டாலர்களாக அதிகரித்துள்ளது. இது தற்போது இரண்டாவது நாளாக வெள்ளி விலையானது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது, 10 கிராமுக்கு 474 ரூபாய் அதிகரித்து, 53,479 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 1% அதிகமாகும். இந்த நிலையில் ஆகஸ்ட் 19 அன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் மீட்டிங் கூட்டத்தில், வட்டி விகிதங்களில் மாற்றங்கள் இருக்குமா? பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் அறிவிப்புகள் இருக்குமா? இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில், கடந்த சில வாரங்களாகவே மிக நல்ல லாபம் கொடுக்கும் கமாடிட்டியாக பார்க்கப்படுவது வெள்ளி தான். ஏனெனில் குறைந்த பட்சம் நாளொன்று 1000 ரூபாய் ஏற்றம் கண்டு வருகிறது. அதேபோல் இன்றும் கிலோவுக்கு 1381 ரூபாய் அதிகரித்து, 70,536 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 2% ஏற்றமாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+