இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்? உச்சத்தில் இருந்து ரூ.9000 சரிவில் தங்கம்.. வாங்க சரியான நேரமா!

தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,000 ரூபாய்க்கும் மேல் சரிவில் தான் காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா?

இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையானது சரியத் தொடங்கியிருந்தாலும், நேற்றும் இன்றும் மீண்டும் சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஃபண்டமெண்டல் காரணிகள் எப்படியுள்ளது. டெக்னிக்கலாக தங்கம் விலையானது எப்படியுள்ளது? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது வாங்க நல்ல வாய்ப்பு தான்

இது வாங்க நல்ல வாய்ப்பு தான்

தங்கம் விலையானது இன்று ஏற்றம் கண்டிருந்தாலும், இம்மாத தொடக்கத்தில் இருந்து 10 கிராமுக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்தும் 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்க டாலரின் மதிப்பு மூன்று மாத உச்சத்தினை தொட்டுள்ள நிலையில், தங்கம் விலையானது சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்த வாரத்தில் வெளியாகவிருக்கும் அமெரிக்காவின் வேலை குறித்தான டேட்டாவினை முதலீட்டாளர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் மீதான அடிப்படை இறக்குமதி வரி

தங்கம் மீதான அடிப்படை இறக்குமதி வரி

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை இந்திய அரசு குறைத்துள்ளது. இது மஞ்சள் உலோகத்தின் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் இறக்குமதியினை அதிகரிக்க வழிவகுக்கலாம். தேவையினை சற்று ஊக்குவிக்கலாம். தற்போது இந்தியாவினை பொறுத்தவரையில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்

அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்

அமெரிக்காவில் பே ரோல் விகிதமானது எதிர்பார்ப்பினை விட, கடந்த ஜுன் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் தனது சேவை துறைகளை ஊக்குவித்துள்ள நிலையில், பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளதை பார்க்க முடிகிறது. இதுவும் டாலரின் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றாலும், நாளை வெளியாகவிருக்கும் நான்பார்ம் பே ரோல் டேட்டாவினை முதலீட்டாளர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர்.

வட்டி விகிதம் அதிகரிப்பு

வட்டி விகிதம் அதிகரிப்பு

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. அப்படி வட்டி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அது தங்கம் விலையினை இன்னும் விலை உயர்ந்ததாக மாற்றலாம். இது சந்தையில் பெரிய கரெக்சனை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தெளிவாக்கும் விதமாக மாத கேண்டில் பேட்டர்ன் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தற்போதைக்கு தங்கம் விலை ஏற்றம் கண்டாலும். ஒரு மிகப்பெரிய சரிவு என்பது நிச்சயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.40 டாலர்கள் அதிகரித்து, 1774 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.47% அதிகரித்து, 26.288 டாலர்களாக காணப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 81 ரூபாய் அதிகரித்து, 46,920 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 498 ரூபாய் அதிகரித்து, 68,633 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 4,443 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 35,544 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 37 ரூபாய் அதிகரித்து, 4,847 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து 38,776 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 1.20 ரூபாய் அதிகரித்து, 74.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து, 74,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே குறைந்திருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. தங்கம் விலையானது குறைந்தால், முக்கிய சப்போர்ட்டாக 46,660 - 46500 ரூபாயாகவும், இதே அதிகரித்தால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 47,055 - 47,200 ரூபாயாகவும் உள்ளது.

இதே வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவலாக 68,500 - 68,100 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 69,500 - 69,900 ரூபாயாகவும் உள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நாளை வரவிருக்கும் டேட்டாவினை பொறுத்து வாங்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+