கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!

கடந்த ஆண்டு முழுவதும் தங்கம் விலையானது உச்சத்தினை தொடும். மீண்டும் அதிகரிக்கும். மீண்டும் பழைய உச்சத்தினை உடைக்கும். இப்படி பல தனி நபர் முதல் கொண்டு, பல ஆய்வு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலவும் கூறி வந்தன.

ஆனால் அவர்கள் கூறியதற்கு எதிர்மாறாக, முந்தைய இரு வாரங்களாக தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டது. எனினும் இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏற்றம் ஆரம்பித்துள்ளது.

இதனால் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திரும்போலிருக்கே என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் தங்கம் விலையானது சரிய பல காரணிகள் சாதகமாக இருந்தும், தங்கம் விலையானது தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? சாதகமான மற்றும் பாதகமான காரணிகள் என்னென்ன? இனி எப்படி இருக்கும் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை


சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. எனினும் இன்றும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. தற்போது அவுன்ஸூக்கு 6.50 டாலர்கள் அதிகரித்து, 1873 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வில் 1870.10 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்திலும் 1870.10 டாலர்களாகவும் தொடங்கியுள்ளது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் நான்காவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 1.16% ஏற்றம் கண்டு, 26.065 டாலர்களாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று குறைவாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 181 ரூபாய் அதிகரித்து, 49,715 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலையானது 1 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 716 ரூபாய் அதிகரித்து, 67,708 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

பரவி வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது முதலீட்டாளார்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட பரவலுக்கே பொருளாதாரமானது வீழ்ச்சியினை கண்டு வந்த நிலையில், இரண்டாம் கட்ட பரவல் பல நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மேற்கொண்டு பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

பிடன் அரசு என்ன செய்யபோகிறதோ?

பிடன் அரசு என்ன செய்யபோகிறதோ?


தற்போது இரண்டாம் கட்ட பரவலுக்கும் மத்தியில் கூடுதல் ஊக்கத்தொகை பற்றிய யோசனைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வரி உயர்வு, அமெரிக்க சீன உறவு, கரன்சி மேனேஜ்மென்ட் உள்ளிட்டவை பற்றிய நிச்சயமற்ற நிலை நிலவி வருகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

பொதுவாக பார்க்கும்போது பிடன் அரசு விரைவில் மிகப்பெரிய ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதாரத்துக்கு ஆதரவாகவும், தங்கத்திற்கு எதிராகவும் அமையலாம் என்ற கருத்தே நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையானது சரிய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

சர்வதேச சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், அமெரிக்க ஊக்கத்தொகை பற்றிய எதிர்பாப்புகள், பொருளாதாரத்தினை மீட்டு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் பணவீக்கத்திற்கு எதிரான காரணியாக இருப்பதால், தங்கம் விலையானது பிடனின் நடவடிக்கைகளை பொறுத்து இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் தற்போது சற்று தங்கம் விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+