சாமனியர்கள் இனி நினைக்க மட்டும் தான் முடியும் போல.. மீண்டும் தொடர் ஏற்றத்தில் தங்கம்..!

சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில், கிரிப்டோ கரன்சி மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது அதிகரித்து வருகின்றது.

இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் தான் தற்போது தங்கத்தின் விலையானது 4 மாத உயர்வில் காணப்படுகிறது.

வரும் வாரத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டா வெளியாக இருப்பதால், இது டாலர் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் தங்கம் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதோடு கிரிப்டோகரன்சிகளும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் பாதுகாப்பு புகலிடமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து தங்கத்தின் முதலீட்டு தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையானது இன்னும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளார்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளார்கள் மத்தியில் அச்சம்

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி இருந்தாலும், குறிப்பாக சில மாநிலங்களில் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இதனால் இது இன்னும் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துமோ? பொருளாதாரத்தில் எந்த மாதிரியான சரிவுகளை ஏற்படுத்துமோ என்ற நிலையே நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகின்றன.

இன்று தங்க பத்திரம் வெளியீடு

இன்று தங்க பத்திரம் வெளியீடு

இந்தியாவில் பிசிகல் தங்கத்திற்கான தேவை குறையலாம் என்றாலும் ரூபாயின் மதிப்பு சரிவில் உள்ள காரணத்தினால், முதலீடுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் தங்கத்தின் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக இன்று நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கட்ட தங்க பத்திரம் இன்று வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் வாரத்தின் முதல் நாளான இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 8.75 டாலர்கள் அதிகரித்து, 1885.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையினை பொறுத்தவரையில், தங்கத்தினை விட பலமாக ஏற்றம் கண்டு வருகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.29% அதிகரித்து, 27.832 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. நீண்டகால நோக்கிலும் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய தங்கம் விலை நிலவரம்

இந்திய தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 48,590 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட. இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய வெள்ளி விலை நிலவரம்

இந்திய வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் இன்று சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 567 ரூபாய் அதிகரித்து, 71,672 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்கவும் சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று பெரியளவில் இதுவரை மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 4,598 ரூபாயாகவும், சவரனுக்கு 36,784 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றோடு தொடர்ச்சியாக தங்கம் விலையானது மூன்று நாட்கள் ஏற்றத்தில் காணப்படுகிறது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு சற்று அதிகரித்து 5013 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,104 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 58,130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 0.30 பைசா அதிகரித்து, 76 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 300 ரூபாய் அதிகரித்து, 76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கம்

பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கம்

சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தைகளும் சரிவிலும் காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவின் காரணமாக மற்ற ரிஸ்கியான முதலீடுகளை விட, வட்டியே இல்லாவிட்டாலும், பாதுகாப்பு புகலிடமான தங்கமே சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+