தங்கம் விலையானது வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று குறைந்த விலையில் தான் காணப்படுகின்றது.
கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில், 1700 - 1800 டாலர்களுக்கு இடையிலேயே காணப்படுகின்றது.
ஆக இந்த லெவலில்கள் ஏதேனும் ஒரு முக்கிய லெவலை உடைக்கும் பட்சத்தில், தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் மதிப்பு சரிவு
தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது, சற்றே வலுவிழந்துள்ள நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது மீண்டும் மூன்றாவது நாளாக தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்காவின் பத்திர சந்தையும் சரிவில் தான் காணப்படுகின்றது.
மத்திய வங்கியின் முடிவென்ன?
வரவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூடட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றாலும், அது பெரியளவில் இருக்காது என்பதை சுட்டிகாட்டுவது போல் அதன் அறிவிப்புகள் வெளியானது. ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதாரவாகவே அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தினை மெதுவாக முன்பை காட்டிலும் குறைவாக அதிகரிக்கலாம்.
தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்
டாலரின் மதிப்பு சரிவை கண்டு வரும் நிலையில் தங்கத்தின் விலையானது இந்திய சந்தையிலும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்திலும் தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
டாலர் Vs பணவீக்கம் Vsதங்கம்
டாலரின் மதிப்பு ஒவர் நைட்டில் 1% குறைந்துள்ள நிலையில், இது டாலரில் தங்கத்தினை வாங்குபவர்களுக்கு விலை குறைந்ததாக மாற்றியுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கவும் காரணமாக அமைந்துள்ளது. கூடாக பணவீக்கம் குறைந்தாலும், இன்னும் அரசின் இலக்கினை எட்டவில்லை. ஆக இதுவும் தங்கத்தினை வாங்க தூண்டியிருக்கலாம்.
ஆதரவு
தொடர்ந்து அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரித்து வந்த நிலையில், இது பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம். அதோடு சீனாவிலும் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.30 டாலர்கள் அதிகரித்து, 1759.40 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 0.69% அதிகரித்து, 21.515 டாலராக காணப்படுகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் 21.730 டாலர்களை உடைத்தால் சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. அதுவரையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து, 52,680 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 108 ரூபாய் குறைந்து, 61,885 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரித்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் மீடியம் டெர்மில் குறைந்து பின்னரே அதிகரித்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 4 ரூபாய் அதிகரித்து, 4935 ரூபாயாகவும், சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 39,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5384 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 53,840 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு, 20 பைசா குறைந்து, 68 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 68,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications