செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு வார காலமாக நல்ல ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, நிபுணர்கள் கூறுவதை போல மீண்டும் 2000 டாலர்களுக்கு மேல் சென்று விடுமோ என்று அஞ்சப்பட்டது.

சொல்லப்போனால் கிடைத்த நல்ல வாய்ப்பினை மிஸ் பண்ணிவிட்டோமோ? என்றெல்லாம் முதலீட்டாளர்கள் மத்தியில், ஒரு உணர்வு இருந்து வந்தது.

ஆனால் அப்படியானவர்களுக்கு இன்று மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது சரியத் தொடங்கியுள்ளது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

என்னவெல்லாம் இன்று பார்க்கபோகிறோம்?

என்னவெல்லாம் இன்று பார்க்கபோகிறோம்?

தங்கம் விலையானது செம சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்னும் குறையுமா? இல்லை மீண்டும் அதிகரிக்குமா? இங்கு வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள்? இனியும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கலாம்.

Comex தங்கம் விலை

Comex தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, காலையிலேயே செம சரிவில் உள்ளது. (9.40 மணியளவில்) தற்போது அவுன்ஸூக்கு 15 டாலர்கள் குறைந்து, 1859 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்று தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட குறைந்துள்ள நிலையில், நேற்றைய குறைந்தபட்ச விலையான 1863.90 டாலர்களையும் உடைத்து காட்டியுள்ளது. இதனால் தங்கல் விலை இன்று இன்னும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கப்பார்க்கின்றனர்.

Comex வெள்ளி விலை

Comex வெள்ளி விலை

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. தங்கமானது அரை சதவீதத்திற்கும் மேலாக குறைந்து காணப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலையானது 1.38% குறைந்து வர்த்தகமாகி வருகின்றது. தற்போது 1.38% குறைந்து, 24.395 டாலர்களாக குறைந்து வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 24.736 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 24.723 டாலர்களாக தொடங்கியுள்ளது
கவனிக்கதக்கது. அதோடு தங்கத்தினை போல நேற்றைய குறைந்தபட்ச விலையான 24.550 டாலர்களையும் உடைத்துக் காட்டியுள்ளது.

 

 

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை பலத்த வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 384 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 49,725 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று 50,109 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,850 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 808
ரூபாய் குறைந்து, 64,384 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, கீழாக இன்று தொடங்கியுள்ளது. ஆக வெள்ளியின் விலையும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய எதிர்பார்ப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தம் பற்றிய எதிர்பார்ப்பு

சர்வதேச அளவில் மிக முக்கியமாக முதலீட்டாளர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வரும் பிரெக்ஸிட் ஒப்பந்தம், பற்றிய சாதகமான அறிவிப்புகள் வருமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஏனெனில் பிரிட்டீஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் நெருக்கமான பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது.

தடுப்பூசிக்கான அங்கீகாரம்

தடுப்பூசிக்கான அங்கீகாரம்

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிக்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அமெரிக்காவிலும் அனுமதி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவில் நொடிந்து போன பொருளாதாரங்களை மீட்டெடுக்க பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சியினை எட்டும். இது பங்கு சந்தைகளுக்கு ஆதரவாக அமையும் என்றும் கூற்ப்படுகிறது.

வலுவான பங்கு சந்தை ஏற்றம்

வலுவான பங்கு சந்தை ஏற்றம்

சர்வதேச பங்கு சந்தைகள் பல வித காரணங்களினால் 2 வார உச்சத்தில் உள்ளன. இது அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஊக்கத் தொகை குறித்தான சாதகமான அறிவிப்புகள் வந்து கொண்டுள்ளன. அதிலும் அமெரிக்காவில் ஊக்கத் தொகை கூடுதலாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளன.

விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்புவோம்

விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்புவோம்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் பற்றிய செய்திகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், இதனால் சர்வதேச பொருளாதாரம் 2021ல் மீண்டு வந்து விடும் என்ற நேர்மறையான தாக்கங்கள் முதலீட்டாளார்கள் மத்தியில் எழுந்துள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் பொருளாதாரத்திற்கும், டாலருக்கும் இன்னும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதோடு ஐரோப்பிய மத்திய வங்கியும் பெரியளவில் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்பினை கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்கலாமா?

தங்கம் வாங்கலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறி வந்தாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே. ஏனெனில் கேண்டில் பேட்டர்ன்களும் தங்கம் விலை இன்று சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today slump sharply, a day after big jump

Gold price update.. Gold prices today slump sharply, a day after big jump
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X