தடுமாறும் தங்கம் விலை.. உச்ச விலையில் இருந்து ரூ.9000 வரை சரிவு.. இதுதான் சரியான நேரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த நான்கு வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

 

இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையில், தங்கத்தினை இன்று வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையுமா என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

பொதுவாக தங்கம் என்றாலே மிகுந்த கவர்ச்சிகரமான பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் நிலையில், தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்றால், அது நல்ல விஷயம் தானே. ஏனெனில் தங்கம் குறைந்த விலை என்பது பலருக்கும் வாங்க ஆர்வத்தை தூண்டும் என்பதால், இது தங்கத்திற்கு ஆதரவை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தங்கத்திற்கு எதிரான காரணிகள்

தங்கத்திற்கு எதிரான காரணிகள்

ஆக தங்கத்தினை வாங்க இது சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. அதோடு தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு, தற்போது சற்றே அழுத்தத்தில் உள்ளது. அதோடு சர்வதேச சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, இன்று ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் மதிப்பு தற்போது அழுத்தத்தில் இருந்தாலும், அறிவிப்புக்கு பின்னர் மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

எனினும் மறுபக்கம் பணவீக்கம் என்பதும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கமானது, பாதுகாப்பு புகலிடமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதோடு தற்போது தங்கம் விலையானது குறைவாக உள்ள நிலையில், இது பல முதலீட்டாளர்களை வாங்க தூண்டும். இது தங்கத்திற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசிக்கு அனுமதி
 

தடுப்பூசிக்கு அனுமதி

தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளது. இது அதிகரித்து வரும் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இது சர்வதேச பொருளாதாரம் மீண்டு வர இது வழிவகுக்கும். பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழி வகுக்கும்.

இன்று அறிவிப்பு வரலாம்

இன்று அறிவிப்பு வரலாம்

இன்று அமெரிக்க ஊக்கத்தொகை பற்றிய முக்கிய அறிவிப்பினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் கொரோனாவை குறைக்கும் விதமாக, தடுப்பூசிகள் பற்றிய சாதகமான செய்திகளும் வந்து கொண்டுள்ளன. இது தங்கத்திற்கு எதிராக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

உச்சத்தில் இருந்து ரூ.9000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.9000 சரிவு

எப்படி இருப்பினும் அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சற்று அழுத்தத்தில் உள்ள நிலையில், மீடியம் டெர்மில் தங்கத்திற்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஆகஸ்ட் மாத உச்ச விலையில் இருந்து பார்க்கும்போது, தங்கம் விலையானது சுமார் 9,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இதனால் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று காலையில் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு 1.90 டாலர்கள் குறைந்து, 1821.30 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கிடையில் இன்றும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 1.47% அதிகரித்து, 27.730 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 27.672 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.668 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டாலும், இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 130 ரூபாய் அதிகரித்து, 47,371 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகத் தொடங்கியுள்ள நிலையில் இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 130 ரூபாய் அதிகரித்து, 70,259 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. ஆக இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

Array

Array

இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலை 47,000 - 46,820 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 47,550 - 47,770 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
வெள்ளியின் முக்கிய சப்போர்ட் விலை 70,500 - 69,800 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 70,900 - 71,400 ரூபாயாகும்.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மிலும் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் அமெரிக்க அறிவிப்புகள் சாதகமாக வந்தால், தங்கம் விலையானது மீண்டும் குறையலாம். இதனால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today struggle after four day falling in MCX

Gold price updates.. Gold prices today struggle after four day falling in MCX
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X