தடுமாறும் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா? இன்னும் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. முந்தைய அமர்வில், காலை நேரத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், பின்னர் மாலை நேர அமர்வில் நல்ல ஏற்றம் கண்டு முடிவடைந்தது.

இதற்கிடையில் இன்றும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் விலை சுமார் 5000 ரூபாய் சரிவில் உள்ளது. இதே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சமான 56,200 ரூபாயுடன் ஒப்பிடும்போது, சுமார் 11,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

ஆக இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், குறைந்த விலையானது நீண்டகால நோக்கில் முதலீட்டாளார்களை வாங்க தூண்டலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? அடுத்த என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

தடுமாறும் தங்கம் விலை

தடுமாறும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1 டாலர் குறைந்து 1714.60 டாலர்களாக காணப்படுகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்சமான 1712.80 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. அதோடு முந்தைய இரண்டு அமர்வுகளின் குறைந்தபட்ச விலையும் 1676.50 டாலர்களாகவே உள்ளது. ஆக தங்கம் விலையானது நிபுணர்கள் கூறியதை போல, 1660 டாலர்களை உடைக்காமல் மேலேயே உள்ளது. அதேபோல் 1760 டாலர்களையும் உடைக்காமல் காணப்படுகிறது.

சற்றே சரிந்த வெள்ளி விலை

சற்றே சரிந்த வெள்ளி விலை

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிந்து தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.55% குறைந்து, 24.398 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு

இந்திய சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. இது தற்போது 10 கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்து, 45,165 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் தட்டுதடுமாறும் வெள்ளி

இந்திய சந்தையில் தட்டுதடுமாறும் வெள்ளி

சர்வதேச சந்தையினை போலவே வெள்ளியின் விலையும், இந்திய சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது. இது தற்போது கிலோவுக்கு 62 ரூபாய் குறைந்து 63,752 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

சாமனியர்களுக்கு ஏமாற்றம் தந்த ஆபரண தங்கம்

சாமனியர்களுக்கு ஏமாற்றம் தந்த ஆபரண தங்கம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பலமான ஏற்றம் கண்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது, இன்று கிராமுக்கு 52 ரூபாய் அதிகரித்து, 4,226 ரூபாயாகவும், சவரனுக்கு 416 ரூபாய் அதிகரித்து, 33,808 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 4610 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 448 ரூபாய் அதிகரித்து, 36,880 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த மூன்று அமர்வுகளாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.20 பைசா அதிகரித்து, 68.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1,200 ரூபாய் அதிகரித்து 68,500 ரூபாயாகவும் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த 5 தினங்களில், மூன்று நாட்கள் சரிவிலும், 2 நாட்கள் மாற்றமில்லாமலும் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

அமெரிக்க ஜனாபதி போக்குவரத்து, தொலைத்தொடர்பு துறை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு துறை ஆகியவற்றில் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டு திட்டத்தினை வெளியிட்டுள்ளார். இது அமெரிக்காவின் ஊக்கத்தொகை அறிவிப்பான 1.9 டிரில்லியன் டாலர் அறிவிக்கப்பட்ட பின்னர் வந்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது, இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

பணவீக்கம் பற்றிய கவலை

பணவீக்கம் பற்றிய கவலை

ஆய்வாளார்கள் பொருளாதார தூண்டுதல் நடவடிக்கைகள், பொருளாதாரத்தில் பணவீக்கத்தினை தூண்டும். பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் சற்று ஏற்றம் காணலாம் என்று கூறப்பட்டாலும், இன்று வரையில் முக்கிய லெவலான 1760 டாலர்களை உடைத்துக் காட்டவில்லை. அதற்கு கீழாகவே காணப்படுகிறது. எனினும் இதுவரை 1660 டாலர்களையும் உடைத்துக் காட்டவில்லை. எனினும் அதிக நிதி ஊக்கத்தொகை அறிவிப்புகள் இதனை உடைக்க வழிவகுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் இன்னும் கூட சற்று அழுத்தத்தில் தான் காணப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

ஆக மேற்கண்ட பல காரணிகளுக்கும் மத்தியில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்படுகிறது. பத்திர லாபம் தொடர்ந்து வலுவாக காணப்படும் நிலையில், டாலரின் மதிப்பும் சற்று வலுவாகவே காணப்படுகிறது. ஆக இது மற்ற நாணயதாரர்களுக்கு தங்கத்தினை சற்று உயர் மதிப்புடையதாக மாற்றியுள்ளது. இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

ஆக தங்கத்தினை பொறுத்த வரையில் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான நேரமாகவே பார்க்கப்படுகிறது. டாலரின் மதிப்பு வலுவாக உள்ள நிலையில், அது மீடியம் டெர்மில் எதிரொலிக்கலாம் என்பதால், முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today struggle again, is it right time to buy?

Gold price update.. Gold prices today struggle again, is it right time to buy?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X