சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் சரிவு.. இது வாங்க சரியான நேரமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முந்தைய அமர்வில் சற்று ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், இன்று முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகிறது. வெள்ளி விலையும் சற்றே சரிவில் தான் காணப்படுகிறது.

 

அதோடு கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது கிட்டதட்ட 11,400 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது.

ஆக குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க இது நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினை இது தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச காரணிகள் பலவும் தங்கத்திற்கு சாதகமாக உள்ளது.

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளி விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் தங்கம் விலை இனி எப்படி இருக்கும்? இன்று எப்படி இருக்கும்? முக்கிய லெவல்கள் என்ன? என பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது முந்தைய அமர்வில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1.25 டாலர்கள் குறைந்து, 1731.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது சற்று குறைந்திருந்தாலும், ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை
 

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.72% குறைந்து, 25.050 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தினசரி மற்றும் வார கேண்டில் பேட்டர்னில் குறையும் விதமாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 57 ரூபாய் குறைந்து, 44,803 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் தொடக்க விலையானது, நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது.எனினும் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. ஆக மீடியம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். அதோடு தங்கத்தின் தற்போதைய கரண்ட் காண்டிராக்ட் ஏப்ரல் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது. ஆக நீண்டகால முதலீட்டாளர்கள் இதனையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 367 ரூபாய் குறைந்து, 64,878 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

அழுத்தத்தில் தங்கம் விலை

அழுத்தத்தில் தங்கம் விலை

அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர லாபம், இன்னும் பல சர்வதேச காராணிகளால், டாலரின் மதிப்பு வலுவாக காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்றே அழுத்தத்தில் காணப்படுகிறது. தங்கம் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போது சைடுவேயாக உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் சப்போர்ட் விலையானது 1720 - 1725 டாலர்களாகும். ஒரு வேளை இதற்கு மேலாக இருந்தால், ரெசிஸ்டன்ஸ் லெவல் 1740 டாலர்களாகும்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

சர்வதேச முதலீட்டாளர்கள் தொடர்ந்து பத்திர சந்தையை கண்கானித்து வருகின்றனர். இது சற்று அழுத்தத்தினை காணும் போது முதலீடுகள் குறைக்கப்படலாம். அல்லது வெளியேற்றப்படலாம். எப்படி இருந்தாலும் அதிகரிக்கும் பத்திர லாபம், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

ஆறு நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவாக காணப்படுகிறது. எனினும் ஐரோப்பிய நாடுகளில் மூன்றாம் கட்ட பரவல், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் கட்ட பரவல், இதனால் கடுமையாக்கப்பட்டு லாக்டவுன் விதிமுறைகள், தடுப்பூசிகள் தாமதம் என பலவும் முலீட்டாளர்களின் கவலையை அதிகரித்து வருகின்றது, ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது தங்கம் விலையானது 11,400 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. அதோடு இன்னும் சில வாரங்களில் ஏப்ரல் காண்டிரக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த காண்டிராக்டில் வாங்குவது நல்லது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருப்பது நல்லது. எனினும் நீண்ட கால நோக்கிலும் தங்கத்தினை வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices today struggle, silver trade near Rs.64,900

Gold price update.. gold prices today struggle, silver trade near Rs.64,900
Story first published: Thursday, March 25, 2021, 15:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X