கடும் வீழ்ச்சிக்கு பிறகு தடுமாறும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முதலீட்டாளர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த அமர்வில் 1721.10 டாலர்கள் வரை சரிவை கண்டது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாங்க நல்ல இடமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் குறையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏனெனில் தங்கம் விலையானது அதன் முக்கிய சப்போர்ட் லெவல்களை உடைத்து காட்டியுள்ளது. இது மேலும் தங்கம் விலை சரியலாம் என்ற உணர்வினை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தையில் சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? தங்கம் விலையை பாதிக்கும் முக்கிய காரணிகள் என்னென்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன என வாருங்கள் பார்க்கலாம்.

 அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..! அமெரிக்காவில் கலக்கும் திருச்சி பையன்.. இந்திய ஐடி நிறுவனங்கள் வியப்பு..!

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது கிட்டத்தட்ட ஆறு மாத சரிவில் காணப்படும் நிலையில், இது நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்திய சந்தையில் அதன் விலையானது உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 10,400 ரூபாய்க்கு மேலாக வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் தேவை

அதிகரிக்கும் தேவை

பொதுவாகவே இந்தியாவில் தங்கம் என்றால், அது ஒரு கவர்ச்சிகரமான உலோகமாக பார்க்கப்படுகிறது. ஆக இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில், தங்கத்தில் முதலீட்டினை அதிகரிக்க கூடும் என்ற நிலையும் நிலவி வருகிறது. இது குறித்து நகைக்கடை வட்டாரங்களும், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும் என்று கூறி வருகின்றனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பலத்த சரிவிலும் காணப்படுகின்றது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது அதிகரித்தாலும் சரிவைக் கண்டு வருகிறது. இது கிட்டத்தட்ட ஆறு மாத சரிவிலும் காணப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

சாதகமான வட்டி விகிதம்

சாதகமான வட்டி விகிதம்

அமெரிக்காவில்வட்டி விகிதம் என்பது தற்போது குறைவாகவே உள்ளது. எனினும் அமெரிக்க பத்திரம் வாங்குதலை படிப்படியாக நவம்பர் மாதம் முதல் குறைக்கும் என்று கூறியுள்ள நிலையில், இது விரைவில் வட்டி விகிதத்தினையும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய அறிவிப்புகளையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கம் விலையானது தற்போது 1733 டாலர்கள் என்ற நிலையில் காணப்படுகிறது. இது தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், மேற்கொண்டு சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. சொல்லப்போனால் தங்கம் விலையானது மேற்கொண்டு 1756 டாலர்களை உடைத்தால் மட்டுமே, மேற்கொண்டு அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதே 1730 டாலர்களை உடைத்து அதற்குக் கீழாக தொடர்ந்து வர்த்தகம் ஆனால், 1717 - 1722 வரையிலாக வர்த்தகம் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் அடுத்த முக்கிய சப்போர்ட்டாக 45,500 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 46,350 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 10 டாலர்கள் அதிகரித்து, 1732.85 டாலர்களாக காணப்படுகிறது. இந்த முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று தொடக்கத்தில் மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்சம், குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.34% அதிகரித்து, 21.558 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியான இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து, 45,725 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 45,585 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 45,650 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் டிசம்பர் கான்ட்ராக்டில் வாங்கலாம்.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இதே வெள்ளியின் விலையானது, சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்து, 58,346 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வில் 58,386 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 58,500 ரூபாயாகவும் தொடங்கியுள்ளது. இது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4,340 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 34,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,735 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 47,350 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றது. இது கிராமுக்கு 1.80 பைசா குறைந்து, 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 63,000 ரூபாயாகவும், கிலோவுக்கு 1,800 ரூபாய் குறைந்து, 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் தேவையானது விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம் என்பதால், வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices today struggling after heavy fall

Gold price latest updates.. Gold and silver price today struggling after heavy fall
Story first published: Thursday, September 30, 2021, 12:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X