கடந்த சில வாரங்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலையானது இன்றும் காலையில் சற்று ஏற்றம் கண்டு தற்போது மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது இன்று காலையில் ஆல் டைம் ஹையான 53,429 ரூபாயினை தொட்டு பின்பு சரியத் தொடங்கியுள்ளது.
இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊக்குவிப்பு சலுகைகள் கிடைக்குமா?
அமெரிக்கா டாலரின் மதிப்பு சரிவினால், சர்வதேச சந்தைகளின் நிலையற்ற தன்மையால் தங்கம் விலையானது வரலாற்று உச்சம் தொட்டது. ஏனெனில் அமெரிக்காவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ஊக்குவிப்பு சலுகைகள் கிடைக்குமா? என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆக இது குறித்து அதிகரித்து வரும் கவலைகள் தங்கம் விலையினை ஆதரித்து வருகின்றன.
பங்கு சந்தையில் முதலீடுகள் வீழ்ச்சி
இது பங்கு சந்தைகளில் குறைந்த முதலீட்டிற்கே வழிவகுத்தது. ஏனெனில் முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு புகலிடத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதோடு பல நிபுணர்களும் தங்கம் விலை பற்றி நேர் மறையாகவே கூறி வருவதால், தங்கம் விலையானது தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.
தங்கம் விலை சற்று குறைவு
எனினும் தற்போது தொடர்ச்சியாக 6 வர்த்தக அமர்விற்கு பின்பு, தங்கம் விலையேற்றம் இன்று ஏறுவது சற்று குறைந்துள்ளது. இது உச்சத்தினை தொட்ட நிலையில், முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங்கு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து சில மணி நேரங்களாக குறைந்து வருகிறது.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச சந்தையிலும் தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 11.10 டாலர்கள் குறைந்து, 1942.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.56% வீழ்ச்சியாகும். இது முன்னதாக 1936.40 டாலர்கள் வரை சென்று தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது 4.69% வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. தற்போது வெள்ளியின் விலையானது 1.14 டாலர்கள் குறைந்து, 23.168 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது கடந்த மூன்று வர்த்தக தினங்களாக சற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தற்போது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலையானது 287 ரூபாய் குறைந்து 52,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.54% சரிவாகும். இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கி 53,429 ரூபாயினை தொட்ட பின்பு, குறையத் தொடங்கிய தங்கம் விலையானது தற்போது நன்கு குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலைவிலை
இதே வெள்ளியின் விலையானது கிட்டதட்ட 3.98 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 2584 ரூபாய் குறைந்து, 62,770 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையானது இன்று காலை நேர வர்த்தகத்திலேயே சற்று சரிய தொடங்கிய நிலையில் தற்போது கிட்டதட்ட 4 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்று ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையிலும் சரி, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது குறையவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. தற்போது கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து 5,103 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 40,824 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கத்தின் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து 5,560 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாயாகவும் வர்த்தகமாகியும் வருகிறது. இது 10 கிராமுக்கு 55,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 3.05 ரூபாய் குறைந்து, 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கிலோவுக்கு 3,050 ரூபாய் குறைந்து 63,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications