Gold:தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது வரும் வாரத்தில் தொடருமா? குறையவே குறையாதா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
தொடர்ந்து தங்கம் விலையானது 2000 டாலர்களுக்கு மேலாக காணப்படும் நிலையில், இனி குறையுமா? என்ற சந்தேகமும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக சமீபத்திய காலமாக இருந்து வருகின்றது.

இது தற்போது 102.05 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அமெரிக்காவின் மத்திய வங்கியாளர்கள் பணவீக்கம் என்பது விரைவில் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். ஆக தங்கத்தின் விரைவில் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. பணவீக்கம் குறையும்பட்சத்தில் தங்கம் விலையானது குறையலாம் என எதிர்பார்க்கின்றனர்.
பணவீக்கத் தரவினை அடுத்து அமெரிக்காவின் பத்திர சந்தையின் தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். குறிப்பாக முதலீட்டு ரீதியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
தொடர்ந்து நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு,15.95 டாலர்கள் குறைந்து, 2034.95 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1.42% அதிகரித்து, 25.545 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 420 ரூபாய் அதிகரித்து, 60,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது குறைந்தால் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.
வெள்ளி விலையானது இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்த வரையில் கிலோவுக்கு, 935 ரூபாய் அதிகரித்து, 75,975 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் சென்னையில் இன்று கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 5680 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 45,440 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 6196 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 540 ரூபாய் அதிகரித்து, 61,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வெள்ளி விலையானது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 81.40 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 81,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?



Click it and Unblock the Notifications