இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, உணர்வுகள் என பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள, அனைத்து சம்பிரதாய சடங்குகளிலும், ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தங்கம் தான்.
இப்படி இந்திய மக்களின் உணர்களில் கலந்துள்ள தங்கத்தினை, தற்போது மக்கள் டிஜிட்டல் வடிவிலும் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக செய்து வருகின்றனர்.
கொரோனாவின் வருகைக்கு பின்னர், இந்த தங்கம் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை தொட்டுள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
$1800 மேல் தங்கம் விலை வர்த்தகம்
தங்கம் விலையானது தொடர்ந்து நிபுணர்கள் கூறி வருவதை போலவே 1800 டாலர்களுக்கும் மேலாகவே இருந்து வருகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரி மீடியம் டெர்மில் தங்கம் விலை எப்படியுள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இன்றைய நிலவரம் என்ன? வாங்கலாமா? வேண்டாமா? இன்னும் குறையுமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமான காரணிகள் என்னென்ன? நிபுணர்களின் கருத்து என்ன? முக்கிய லெவல்கள் என்ன? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
சரிவில் தங்கம் விலை
கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது காலை அமர்வில் விலையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் ஏற்றம் கண்டு வருகின்றது. எனினும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இன்று வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்ற நிலையில், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதைக்கு சற்று சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையானது, இன்று சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸுக்கு 1.70 டாலர்கள் குறைந்து, 1827.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு முந்தைய அமர்வில் டோஜி கேண்டில் பார்ம் ஆகியுள்ள நிலையில், டோஜியின் உச்சவிலை, குறைந்த விலையை உடைத்தால், விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலை சற்று சரிவில் காணப்பட்டாலும், வெள்ளி விலையானது ஏற்றத்தில் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. தற்போது 0.14% ஆதிகரித்து, 26.430 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தை சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையில் தற்போது 10 கிராம் தங்கம் விலையானது, கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, 48,340 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமில்லை. தற்போது கிலோவுக்கு 69 ரூபாய் குறைந்து, 69,742 ரூபாயாக காணப்படுகிறது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 9 ரூபாய் குறைந்து, 4,566 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 36,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 9 ரூபாய் குறைந்து, 4,981 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து, 39,848 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 74.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாத நிலையில், இன்று அதிகரித்து காணப்படுகிறது.
பத்திர லாபம் சரிவு
அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், தங்கம் விலையானது பெரியளவில் குறையவில்லை. மேலும் தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமையும் விதமாக பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு, வட்டி விகிதத்தில் அமெரிக்க மத்திய வங்கியானது மாற்றம் செய்யவில்லை. இதனால் பணவீக்கம் குறித்தான அச்சமும் நிலவி வருகின்றது.
பாதுகாப்பு புகலிடமான தங்கம்
பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆகவும், பாதுகாப்பு புகலிடமாகவும் இருப்பதால் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு தற்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது நாளுக்கு நாள் குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது பற்பல நாடுகளிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது குறித்து பலவிதமாக கணிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்ப்படுகிறது.
இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், இன்று மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஏனெனில் தற்போது சற்று குறைய ஆரம்பித்துள்ளது. ஆக குறைந்த விலையில் வாங்கும்போது இன்னும் லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!



Click it and Unblock the Notifications