தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி.. இனியும் குறையுமா? இது முதலீட்டாளர்களுக்கு சூப்பரான விஷயம் தான்..!

இந்தியாவில் பாரம்பரிய உலோகமாக இருக்கும் தங்கத்திற்கு மயங்காதவர் உண்டோ? நிச்சயம் இல்லை. இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது தங்கத்தின் விலை, செய்கூலி, சேதாரம் என அனைத்தும் சேர்த்து சுமார் 40,000 ரூபாய்க்கும் மேல் வந்து விடுகிறது.

ஆக மக்கள் தற்போதெல்லாம் கொஞ்சம் உஷாராகி கொண்டுள்ளனர். தேவைக்கேற்ப மட்டும் தங்கத்தினை வாங்கிக் கொண்டு பேப்பர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

சிலர் தங்க பண்ட்களில் முதலீடுகளில் முதலீடு செய்கின்றனர். ஆக மொத்தத்தில் தங்கம் என்பது நம் வாழ்வில் இல்லாமல் இல்லை. சொல்லப்போனால் பிறந்த குழந்தைக்கு முதல் இறப்பு வரை அனைத்துக்கும் சீதனமாக இன்றும் பல இடங்களில் தங்கமே கொடுக்கப்படுகிறது.

குறிப்பிட்ட எல்லைக்குள் வர்த்தகம்

குறிப்பிட்ட எல்லைக்குள் வர்த்தகம்

இப்படி தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போயுள்ள தங்கத்தின் விலையினை பற்றித் தான் பார்க்க போகிறோம். கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது சற்று ஏற்றம் அதிகம் இல்லாமல் காணப்படுகிறது. அதிலும் காலையில் சரிவில் தொடங்கி, மாலையில் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வர்த்தகமாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள்

தற்போது நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது ஒரு புறம் கவலையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. எனினும் மறுபுறம் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக கொரோனா பற்றிய தடுப்பூசிகள் பற்றிய செய்திகள் சாதகமான நிலையில் வந்து கொண்டு இருப்பதால், அதுவும் தங்கம் விலை சற்று குறைய காரணமாக அமைந்துள்ளது.

சீனா அமெரிக்கா இடையேயான பதற்றம்

சீனா அமெரிக்கா இடையேயான பதற்றம்

அமெரிக்கா சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக, தற்போது பிரிட்டனும், சீனாவுக்கு எதிராக நடவடிக்கையினை தொடங்கியுள்ளது. ஆக இது இன்னும் சீனா அமெரிக்கா உறவில் மேலும் விரிசலை உருவாக்கியுள்ளது எனலாம். அதோடு இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாம் கட்ட ஒப்பந்தம் பற்றி தான் சிந்திக்கவேயில்லை என்றும் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

விலை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

விலை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

ஆக இதுவும் தங்கம் விலைக்கு மேற்கொண்டு ஆதரவாக அமைந்துள்ளது. ஆக இன்றைய சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இது ஒரு நிரந்தரமான சரிவல்ல. அதோடு தங்கத்திற்கான பிசிகல் தேவை இருந்தாலும், அதன் முதலீட்டு தேவையானது அதிகரித்தே காணப்படுகிறது. இது நாட்டில் நிலவி வரும் நிலையற்ற பொருளாதார சூழலில், பங்கு சந்தைகள் சரிவினையே கண்டு வருகின்றன.

தங்கம் விலையை ஊக்குவிக்கும் காரணிகள்

தங்கம் விலையை ஊக்குவிக்கும் காரணிகள்

ஆக தற்போதைக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தங்கம் விலைக்கு சாதகமாக அமைந்துள்ளது. டாலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்டவை தற்போதைக்கு தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாகவே காணப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு ஆண்டில் விலை நிலவரம்

நடப்பு ஆண்டில் விலை நிலவரம்

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 19% அதிகரித்துள்ளது. இது குறைந்த வட்டி விகிதம், கொரோன வைரஸ் நெருக்கடி, பணவீக்கத்திற்கு எதிராக பயன்படும் சிறந்த ஹெட்ஜ் என பலவும் தங்கம் விலைக்கு சாதகமாகவே உள்ள நிலையில், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

ஆக நடப்பு நிதியாண்டில் நிச்சயம் தங்கம் விலையானது வலுவான ஏற்றம் காணலாம் பல நிபுணர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா தாக்கம் இன்னும் எப்போது தான் முடிவுக்கு வருமோ என்ற நிலையினை உருவாக்கியுள்ளது. ஆக இது மேற்கொண்டு தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலையானது சற்று சரிவுடனேயே தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 1.55 டாலர் குறைந்து, 1,812.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது தொடர்ந்து காலையில் இறக்கம் கண்டு, முடிவில் ஏற்றம் காண்பதாகவே உள்ளது. இந்த வாரத்தில் அதிகபட்சமாக 1818.80 டாலர்கள் வரை சென்ற நிலையில், குறைந்தபட்சம் 1,791 டாலர் வரையில் சென்றது. ஆக இதற்குள் தான் இந்த நான்கு நாட்களாகவே வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தற்போது சற்று சரிவுடனே காணப்படுகிறது. தற்போது 0.008 டாலர்கள் குறைந்து 19,753 ஆக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையினை போன்றே வெள்ளியின் விலையும் கடந்த சில தினங்களாக சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில் இன்னும் விலை அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 20.000 டாலர்களாக வர்த்தகமாகி வரும் நிலையில், அதனை உடைத்தால் இன்னும் மேற்கொண்டு அதிகரிக்கும் விதமாகவே உள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவடைந்து காணப்பட்டாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கியுள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 41 ரூபாய் ஏற்றம் கண்டு, 49,200 ரூபாயாக காணப்படுகிறது. சர்வதேச சந்தையினை போலவே கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது குறிப்பிட்ட விலைக்குள்ளேயே வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தற்போது சற்று சரிவுடனேயே காணப்பட்டாலும், தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கியுள்ளது. இது தற்போது கிலோவுக்கு 60 ரூபாய் அதிகரித்து, 53,113 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.11% ஏற்றத்தில் உள்ளது.

ஆபரண தங்கம் விலை நிலவரம்

ஆபரண தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது இன்று இன்னும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 4,714 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 37,712 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த புதன் கிழனையன்று சற்று ஏற்றம் கண்டு இருந்த நிலையில், இன்று இன்னும் தங்கம் விலை மாற்றம் காணவில்லை.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 53 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 53,010 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையினைப் போலவே வெள்ளியின் விலையும் புதன் கிழமையன்று அதிகரித்து இருந்த நிலையில், இன்று இதுவரையில் பெரிய அளவில் மாற்றம் காணவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+