தங்கம் விலை 3வது நாளாகவும் சரிவு.. சாமானியர்களுக்கு ஜாக்பாட் தான்!

தங்கம் விலையானது வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தொடர்ந்து கடந்த வாரத்தில் 1791 டாலர் என்ற லெவலை தொட்ட நிலையில், அதன் பிறகு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

இது மேற்கொண்டு குறையுமா? இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் இருக்குமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தொடர்ந்து கடந்த இரண்டு வார காலமாக ஒரு ரேஞ்ச் பவுண்டில் இருந்து வரும் தங்கம் விலையானது, இனி எப்படியிருக்கும்? மத்திய வங்கி கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலை எப்படியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை எதிர்பார்ப்பு?

தங்கம் விலை எதிர்பார்ப்பு?

சற்றே மெதுவாக காணப்படும் டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் காணுமா? பத்திர சந்தை ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா? எந்த மாதிரியான அறிவிப்புகள் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பங்கு சந்தையில தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் நிலைப்பாடு

சீனாவின் நிலைப்பாடு

சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் தாக்கம் காரணமாக, அங்கு தேவை சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் சீனாவில், தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, மேற்கொண்டு லாக்டவுனை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது தங்கத்தின் தேவையை மேற்கொண்டு குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு இருக்குமா?

வட்டி அதிகரிப்பு இருக்குமா?

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதமானது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? என்பது குறித்தான அறிவிப்புகள் ஏதேனும் வருமா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இது தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

பணவீக்கம் என்பது சற்றே குறையத் தொடங்கியிருந்தாலும், இது முழுமையாக குறையவில்லை. இதன் காரணமாக பணவீக்கத்திற்கு சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையில் தாக்கம் இருக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலையில் தாக்கம் இருக்கலாம். இது மத்திய வங்கியின் முடிவு, வரவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவுகளின் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் தங்கம் & வெள்ளி விலை

காமெக்ஸ் தங்கம் & வெள்ளி விலை

சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.95 டாலர்கள் குறைந்து, 1734.85 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இதே வெள்ளியின் விலையானது 0.46% குறைந்து, 20.953 டாலராக காணப்படுகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று தடுமாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் தங்கம் & வெள்ளி விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 73 ரூபாய் குறைந்து, 52,219 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இதே வெள்ளி விலையானது கிலோவுக்கு 66 ரூபாய் குறைந்து, 60,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று சென்னையில் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4885 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 39,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 5329 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 128 ரூபாய் குறைந்து, 53,129 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

 ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 67 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 67,000 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+