பட்ஜெட் 2021 அறிவிப்பினை தொடர்ந்து தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்ட நிலையில், இன்றோடு தொடர்ச்சியாக 4 வது நாளாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.
எனினும் கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, இன்னும் 8000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.
இது தங்கத்தினை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்த விலையானது தங்கம் விலையானது, முதலீட்டாளர்களை வாங்க தூண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறைந்த விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதோடு பட்ஜெட்டில் இறக்குமதி வரியும் குறைந்துள்ளது. இதனால் இனி வரும் காலத்தில் பிசிகல் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்பதால், இது குறைந்த விலையை ஆதரிக்கும். ஆக இது தங்கத்தினை வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

வாங்க நல்ல வாய்ப்பு
கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டு வந்தாலும், ஒட்டுமொத்தத்தில் தங்கம் விலையானது சரிவில் தான் காணப்படுகிறது. அதிலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பார்க்கும் போது 8,000 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது. அதோடு தினசரி கேண்டில் பேட்டர்னிலும் தங்கம் விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இது தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?
அதெல்லாம் சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? எவ்வளவு குறைந்திருக்கு அல்லது விலை கூடிருக்கா? தங்கத்திற்கு சாதகமான பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இனி தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர், உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

காமெக்ஸ் தங்கம் விலை பலத்த சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவினைக் கண்ட நிலையில், இந்த வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.75 டாலர்கள் அதிகரித்து, 1843.45 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய நாள் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது. நேற்றைய உச்சமான 1849.50 தாண்டினால் இன்னும் விலை அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. இன்று சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த 4 வர்த்தக அமர்வுகளாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்றும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.17% ஏற்றம் கண்டு, 27.448 டாலர்களாக வர்த்தமாகி வருகின்றது. எனினும் இது முந்தைய நாள் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது, இன்றும் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 141 ரூபாய் அதிகரித்து, 48,090 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று காலை தொடக்கத்தில் சற்று மேலாகத் தான் காணப்படுகிறது. இது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 47 ரூபாய் குறைந்து, 69,649 ரூபாயாக காணப்படுகிறது. எனினும் இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினையே ஏற்படுத்தியுள்ளது.

உச்சத்தில் இருந்து ரூ.8,000 மேல் சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்க, விலையானது 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், இன்றைய விலையுடன் ஒப்பிடும்போது சுமார் 8000 ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. ஆக இதுவும் தங்கம் வாங்க ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதோடு டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாக இருப்பதால், தங்கம் வாங்க இது ஒரு நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஊக்கதொகை பற்றிய எதிர்பார்ப்புகள்
அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, விரைவில் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் பற்றிய பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. ஆனால் இது குறித்து ஒரு நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது. விரைவில் அறிவிப்பு வரலாம் என்றாலும் அது எப்போது வரும் என முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

டாலர் மதிப்பு
இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு இரண்டுவார குறைந்தபட்ச விலையில் காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது. அதோடு அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், இன்று நுகர்வோர் விலை குறியீடு குறித்த டேட்டாவினை அறிவிக்க உள்ளார். ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய பங்கு சந்தைகள்
ஆசிய பங்கு சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. குறிப்பாக சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக எண்ணிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அதோடு அதிகரித்து வரும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள், சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால் சந்தைகள் ஏற்றத்திலேயே காணப்படுகிறது. எனினும் அமெரிக்க பங்கு சந்தையானது நேற்று ஏற்ற இறக்கத்திலேயே காணப்பட்டது.

முக்கிய சப்போர்ட் லெவல்கள்
நிபுணர்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம். எனினும் குறைந்த விலையானது தங்கத்திற்கு முக்கிய சப்போர்ட்டாக இருக்கும். முக்கிய சப்போர்ட் விகிதமான 47,750 - 47,500 ரூபாயாக இருக்கும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 48,300 - 48,580 ரூபாயாக உள்ளது.
இதே வெள்ளியின் விலை முக்கிய சப்போர்ட் லெவல் 69,500 - 68,500 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் 70,700 - 71,500 ரூபாய் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.